
பாஸ்க்காக் காலம் 5ம் ஞாயிறு
2026.05.03
முன்னுரை.
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின் றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தமது பேரன்பால் பூவுலகை நிரப்புகின்றவரும், சாவினின்று காக்கின் றவரும், பஞ்சத்திலும் வாழ்விக்கின்றவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். பாஸ்க்காக் காலம் ஐந்தாம் ஞாயிறு தினமாகிய இன்று வழியும் உண்மையும் வாழ்வுமான நம் ஆண்டவர் இயேசுவின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம்.
கலக்கத்தோடும், கண்ணீரோடும், ஏக்கத்தோடும், இழப்புக்களோடும் வாழுகின்றவர்களுக்கு: மாபெரும் நம்பிக்கைச் செய்தியொன்று கொடுக்கப்படுகின்றது. நான் சொல்வதை நம்புங்கள்: நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின் றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். என்பதே அச்செய்தியாகும். அத்தோடு நாம் அனைவரும் ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படவும், ஆவிக்கு ரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருக்கவேண்டுமெனவும் இறைவன் விரும்பு கின்றார்.
ஆகவே நாம் அனைவரும் இறைவனில் எப்பொழும் நம்பிக்கை கொண்டு வாழுவோம். அவரில் மகிழு வோம். அவர் விரும்புவதை நிறைவேற்றுவோம், அவர் மக்களாய் வாழ இத் திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
தூய ஆவி நிறைந்த எழுவரைத் தெரிந்தெடுங்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 6:1-7
அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களு டைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப் படவி ல்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.
எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறைஅல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்த வர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந் தெடுங் கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப் போம். நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம் என்று கூறினர்.
திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக ;கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கா னோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர் களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டி னர்.
கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம் பிக்கை கொண்டனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா: 33:1-2,4-5, 18-19
பல்லவி: ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்: பல்லவி:
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி:
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண் ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.பல்லவி:
இரண்டாம் வாசகம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர்,
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:4-9
அன்பிற்குரியவர்களே,
உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரி ந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக! ஏனெனில், இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்; என்று மறைநூலில் காணக்கிடக்கிறது.
நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர்மதிப்புள்ளதாக விளங்கும். நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக் கல்லாயிற்று. மற்றும் அது, இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும் இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்கா ததால் தடுக்கி விழுகிறார்கள்: இதற்கென்றே அவர் கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்: அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழை த்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14:6
அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை! அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:1-12
அக்காலத்தில்;
இயேசு, தம் சீடரை நோக்கிக் கூறியது, ;நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத் தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ;உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ; என்று கொல்லியிருப் பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத் துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் ; என்றார்.
தோமா அவரிடம், ;ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப் படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? என்றார். இயேசு அவரிடம், வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங் கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையம் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிரு க்கிறீர்கள ; என்றார்.
அப்போது பிலிப்பு, அவரிடம், ;ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்: அதுவே போதும் என்றார். இயேசு அவரிடம் கூறியது: பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்க ளோடு இருந்தும் நீ என்னை அறி ந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, தந்தையை எங்களுக்குக் காட்டும் ; என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவ தில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்து கொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்: தந்தை என்னுள் இருக்கிறார்.
நான் சொல்வதை நம்புங்கள்: என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டா வது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்ப வரும் செய்வார்: ஏன், அவற் றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தை யிடம் போகிறேன் என உறுதியாக உங்க ளுக்குச் சொல்கிறேன்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மன்றாட்டுக்கள்.
1.ஆசீரும் அருளும் நிறைந்த அன்புத் தந்தையே இறைவா!
உமது பிரதிநிதிகளாக இருக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படவும், மக்களுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் : அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றவர்களாகவும், நல்ல வழிகாட்டிகளாகவும், ஆவிக்குரிய பலிகளை ஒப்புக் கொடுக்கின்றவர்களாகவும் இருந்து பணியாற்ற வேண்டிய பலத்தையும் உடல் நலத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2.கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!
எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3.ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!
எமது சமூகத்திற்காக உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே உள்ளமும் , ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும் , சமாதானத்தின் தூதுவர்களாகவும் , உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4.அன்புத் தந்தையே இறைவா!
உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் எம் இளைஞர்கள் உமது வார்த்தைக்கு மட்டுமே என்றும் பணிந்து உமது சாட்சிகளாய் வாழவும், அனைவரும் ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படவும், ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருக்கவும் அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் 5thsundayofeaster2026

