மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் தனது பணிக் குருத்துவத்தின் 50வது ஆண்டு பொன் விழாவை 06.01.2023 வெள்ளிக்கிழமை நினைகூர்ந்தார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் தனது பணிக்குருத்துவத்தின் 50வது ஆண்டு பொன் விழாவை 06.01.2023 வெள்ளிக்கிழமை நினைகூர்ந்தார். அதனையொட்டி 07.01.2023 சனிக்கிழமை மன்னார் மறைமாவட்ட குருக்கள், துறவிகள், இறைமக்கள் ஒன்றிணைந்து ஆயருக்கு மதிப்பளிப்பு விழாவொன் றினை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் எற்பாடு செய்திருந்தனர்.
அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆயர் தந்தை நன்றித் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். அதனைத்தொடர்ந்து ஆயருக்கு மதிப்பளிக்கும் சிறு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் அருட்பணியாளர்களும், துறவிகளும், இறைமக்களும், அழைப்புப்பெற்றவர்களும், ஆயர் தந்தையின் நெருங்கிய குடும்ப உறவினர்கள் சிலரும் கலந்து கொண்டனர். மன்னார் மறைமாவட்ட ஆயர்கள் அவர்கள்; புனித ஆறாம் சின்னப்பர் திருத்தந்தை அவர்களால் 1973ம் ஆண்டு தைத்திங்கள் 06ம் நாள் வத்திக்கானில் பணிக்குருவாக அருட்பொழிவு செய்யப் பட்டார். என்பது குறிப்பிடத்தக்கது