மன்னார் மறைமாவட்டத்தின் கற்கிடந்தகுளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த மழுவராயர்கட்டையடம்பன் புனித செபமாலை அன்னை ஆலயம் தற்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் புதிய அருட்பணிப் பரீட்சார்த்தப் பங்காக அறிவிக்கப்பட்டு மன்னார் மறைமாவட்டத்தின் கற்கிடந்தகுளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த மழுவராயர்கட்டையடம்பன் புனித செபமாலை அன்னை ஆலயம் தற்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் புதிய அருட்பணிப் பரீட்சார்த்தப் பங்காக அறிவிக்கப்பட்டுஇன்று 2021.08.07 காலை கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு முறைக்கொப்ப ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் அருட்பணிப் பரீட்சார்த்தப் பங்கு அருட்பணியாளராக நிமிக்கப்பட்ட அருட்பணி.செ.ஸ் ரீபன்ராஜ் அடிகளார் இன்றைய தினம் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்
இன்று காலை மழுவராயர்கட்டையடம்பன் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி பி;.கிறிஸ்துநாயகம் அடிகள்ää மன்னார் மற்றும் முருங்கன் மறைக்கோட்டங்களுக்கான ஆயரின் சிறப்புப் பணிக்கான முதன்மைக்குரு அருட்பணி ச.எமிலியானுஸ்பிள்ளை அடிகள்ää கற்கிடந்தகுளம் பங்குப் பணியாளர் அருட்பணி லீ.சுரேந்திரன் றெவல் அடிகள்ää புதிய பங்கின் பங்குத்தந்தை அருட்பணி.செ.செ.ஸ் ரீபன்ராஜ் அடிகள் ஆகியோர் இணைந்து கொண்டனர். அத்தோடு இப் புதிய அருட்பணிப் பரீட்சார்த்தப் பங்கைச் சேர்ந்த இறைமக்களும் கலந்து கொண்டனர்.
192 கத்தோலிக்கக் குடும்பங்களைக் கொண்ட இந்த அருட்பணிப் பரீட்சார்த்தப் பங்கு
மழுவராயர்கட்டையடம்பன் புனித செபமாலை அன்னை ஆலயம்
தம்பனைக்குளம் புனித வேளாங்கன்னி ஆலயம்
கடலாஞ்சி ( கட்டையடம்பன் வடக்கு) புனித அந்தோனியார் ஆலயம்
நெடுங்குளம் புனித வேளாங்கன்னி ஆலயம்
கரையா கட்டின குளம் புனித சுசையப்பர் ஆலயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.