புனித டொன்பொஸ்கோவின் சலேசியன் துறவற சபையைச் சேர்ந்த அருட்சகோதரர் யேசுதாசன் செபஞானம் 24.07.2021 சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பணிக்குருவாக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் அருட்பொழிவு செய்யப்பட்டார்.

அருட்பணி யேசுதாசன் செபஞானம் அடிகளார் மன்னார் மறைமாவட்டத்தின் உயிலங்குளம் பங்கின் நொச்சிக்குளம் கிராமத்திலிருந்து உருவாகும் முதலாவது அருட்பணியாளராவார். இலங்கை சலேசியன் சபையின் பணியாளராகிய அருட்பணி யேசுதாசன் செபஞானம் அடிகளார் தனது மெய்யியல் மற்றும் இறையியல் கற்கை நெறிகளை தன்சானியா, உரோம் ஆகிய நாடுகளில் பயின்று குருத்துவப் பயிற்சியும் பெற்றார். மன்னார் மறைமாவட்டம் சலேசியன் துறவற சபைக்கு வழங்கும் நான்காவது அருட்பலியாளராக அருட்பணி யேசுதாசன் செபஞானம் அடிகளார் பதிவு பெறுகின்றார்.
இத் திருநிகழ்வில்; மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களோடு இணைந்து இலங்கை சலேசியன் துறவற சபையின் இலங்கைக்கான உதவி மாகாணத் தலைவர் அருட்பணி றொசான் மிராண்டா அடிகளார் மற்றும் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் ஆகியோரும் தற்கால நிலையைக் கருத்திற் கொண்டு சில அருட்பணியாளர்களும் இணைந்து இவ் அருட்பொழிவுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர். இலங்கை அரசு மற்றும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களின் நடைமுறைப்படி சில இறைமக்களும் கலந்து செபித்தனர்.
அருட்பணி யேசுதாசன் செபஞானம் அடிகளார் தனது முதல் நன்றித் திருப்பலியை 25.07.2021 ஞாயிற்றுக் கிழமை காலை தனது வாழ்விடமான நொச்சிக்குளம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் ஒப்புக் கொடுத்தார்.