மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை அவர்களால் புதிய அருட்பணிப் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட குருமுதல்வர் மற்றும் ஆயரின் சிறப்புப் பணி முதன்மைக் குருக்களுக்கான அருட்ப்பணிப் பொறுப்புக்களை முறைப்படி வழங்கும் திருநிகழ்வு இன்று ( 23.07.2021) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்
மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை அவர்களால் புதிய அருட்பணிப் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட குருமுதல்வர் மற்றும் ஆயரின் சிறப்புப் பணி முதன்மைக் குருக்களுக்கான அருட்ப்பணிப் பொறுப்புக்களை முறைப்படி வழங்கும் திருநிகழ்வு இன்று ( 23.07.2021) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திகத்தோலிக்க திரு அவையின் திரு வழிபாட்டு திரு மரபுப்படி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை அவர்களின் தலைமையின் கீழ் அவரது வழிநடாத்துதலோடு நடைபெற்றது.
முதலில் நற்கருணை ஆராதனையோடு ஆரம்பமான இத் திருநிகழ்வில், நற்கருணை ஆராதனை வழிபாட்டை மன்னார் புனித செபஸ்தியார் பேராலய உதவி பங்கு அருட்பணியாளர் பிரசாந்தன் அடிகளார் நடாத்தினார். அதனைத் தொடர்ந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்கு அருட்பணியாளர் அ.ஞானப்பிரகாசம் அடிகளார் இன்றைய நிகழ்வின் பிற்புலத்தை வழங்கினார். இதன் முடிவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தந்தை அவர்கள் அருட்பணியாளர்களையும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற பணிப்பொறுப்புகளையும் விரிவாக எடுத்துரைத்தபின் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக ஆயர் தந்தை அவர்களால் அருட்பணி வழங்கப்பட்ட அருட்பணி. பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரும், மன்னார் மற்றும் முருங்கன் மறைக்கோட்டங்களுக்குரிய ஆயரின் சிறப்புப் பணி முதன்மைக்குருவாக அருட்பணி வழங்கப்பட்ட அருட்பணி ச.எமிலியானுஸ்பிள்ளை அடிகளாரும், வவுனியான மற்றும் மடு மறைக்கோட்டங்களுக்குரிய ஆயரின் சிறப்புப் பணி முதன்மைக்குருவாக அருட்பணி வழங்கப்பட்ட அருட்பணி ச.தேவறாஜா கொடுதோர் அடிகளாரும் தங்களுடைய இறைநம்பிக்கை, கீழ்ப்படிதல், ஒழுக்க வாழ்வு, கத்தோலிக்கத் திரு அவையின் மறையியல் கோட்பாடுகளுக்கு பிரமாணிக்கமாய் நடத்தல் போன்றவற்றிற்கான ஒப்புதலையும், ஆயர் தந்தை அவர்களுக்கு அங்கு கூடியிருந்த குருக்கள், துறவிகள், இறைமக்கள் முன்னிலையில் வழங்கிய பின், அதற்கான சான்றிதழில் கையொப்பத்தையும் இட்டு ஆயர் தந்தையிடமிருந்து பணிப்பொறுப்பிற்கான சான்றுப் பத்திரத்தையும் பெற்றுக்கொண்டனர்..
இறுதியில் ஆயர் தந்தை அவர்களினால் நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டு பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு நிறைவுற்றது.