உலகநாடுகள் அனைத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் கொறோணாத் தொற்றின் தாக்கம் இல்லாதொழிந்து மக்கள் நலமுடன் வாழ இறையருள் வேண்டும் சிறப்பு நாளாக ஜப்பசி மாதம் 24ம் திகதியை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் பிரகடனப்படுத்தியிருந்தனர்.

அதற்கு அமைவாக நேற்று 24.10.2020 சனிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள கத்தோலிக்க ஆலயங்களில் ஒரு சில இறைமக்களின் பங்கேற்றலோடு நாள் முழவதும் தொடர்ச்சியாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மன்னார் மறைமாவட்டத்தில் இவ்வழிபாடுகள் பல பங்குகளில் முன்னெடுத்தச் செல்லப்பட்டன. அத்தோடு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகையின் பிரசன்னத்தில் மூன்று இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 06.30 மணிக்கு மன்னார் பட்டித்தோட்டத்தில் அமைந்துள்ள செபமாலைத் தாசர் சபை அருட்சகோதரிகளின் ஆச்சிரமச் சிற்றாலயத்தில் திருப்பலியும், திருச் செபமாலைத் தியானமும், நற்கருணை வழிபாடும் இடம் பெற்றன.
மதியம் 12.00 மணிக்கு மடுமாதா திருத்தலத்தில் திருச் செபமாலைத் தியானம் நடைபெற்றது. மாலை 06.00 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருச் செபமாலைத் தியானமும், நற்கருணை வழிபாடும் நடைபெற்றன.