மருதமடுத் திருத்தாயாரின் பரிந்துரையோடும், அருட்துணையோடும்; ஆன்மிக வளம் செழித்து வளரும் மன்னார் மறைமாவட்டக் கத்தோலிக்க திருஅவையிலிருந்து எட்டுத் தியாக்கோன்கள், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பணிக்குருக்களாக இன்று 30.07.2020 வியாழக்கிழமை ருதமடுத் திருத்தாயாரின் பரிந்துரையோடும், அருட்துணையோடும்; ஆன்மிக வளம் செழித்து வளரும் மன்னார் மறைமாவட்டக் கத்தோலிக்க திருஅவையிலிருந்து எட்டுத் தியாக்கோன்கள், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் பணிக்குருக்களாக இன்று 30.07.2020 வியாழக்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அருட்பொழிவு செய்யப்பட்டார்கள். இவர்களுள் ஜந்து தியாக்கோன்கள் மறைமாவட்டக் அருட்பணியாளர்களாகவும், இரு தியாக்கோன்கள் திருவுளப் பணியாளர் சபை அருட்பணியாளர்களாகவும், ஒரு தியாக்கோன் சலேசியன் சபை அருட்பணியாளராகவும் தங்களை மனமுவந்து அர்ப்பணித்துள்ளனர்.
இவ் அருட்பொழிவு நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களோடு: மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை, யாழ்ப்பாணம் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.ஜோசவ் ஜெபரெட்ணம்;, யாழ்ப்பாணம் புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்பணி ஜெ.கிருபாகரன் திருவுளப்பணியாளர் சபையின் இலங்கைக்கான முதல்வர் அருட்பணி லொயிட் சாந்திக்குமார் அடிகள், சலேசிய சபையின் இலங்கைக்கான துணை முதல்வர் அருட்பணி அடிகள் மற்றும் அருட்பணியாளர்கள்,துறவிகள் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர். அத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான புதிய அருட்பணியாளர்களின் உறவினர்களும் இவ் அருட்பொழிவுத் திருப்பலியில் கலந்து செபித்தனர்.
அருட்பணியாளர்களாக அருட்பொழிவு பெற்ற குருக்கள்.
அருட்பணி.த.ஜொலிமன்( மறைமாவட்ட அருட்பணியாளர்) – காத்தான் குளம் அன்னை வேளாங்கன்னி ஆலயம்;, கட்டைக்காடு பங்கு.
அருட்பணி.எ.ஜோர்ஜ்கரன் ( மறைமாவட்ட அருட்பணியாளர்) – மாதிரிக்கிராமம்; புனித காணிக்கை அன்னை ஆலயம்;, வஞ்சியன்குளம் பங்கு.
அருட்பணி.செ.அருண்தாஸ் குரூஸ் ( மறைமாவட்ட அருட்பணியாளர்) –புனித ஆனாள் ஆலயம்;, வங்காலைப் பங்கு.
அருட்பணி.பி.பிரசாந்தன் ;( மறைமாவட்ட அருட்பணியாளர்) – நெடுங்கண்டல் புனித அந்தோனியார் ஆலயம்;, அடம்பன் பங்கு.
அருட்பணி.கு.கிருஷாந் ( மறைமாவட்ட அருட்பணியாளர்) – காத்தான் குளம் புனித காணிக்கை அன்னை ஆலயம்;, கட்டைக்காடு பங்கு.
அருட்பணி.செ.யூட் ரவீந்திரன் ( திருவுளப் பணியாளர் அருட்பணியாளர்) – கங்காணிதீவு புனித அடைக்கல அன்னை ஆலயம்;, நானாட்டான் பங்கு.
அருட்பணி.அ.அன்ரனி மரியதாஸ் குரூஸ் ( திருவுளப் பணியார் சபை அருட்பணியாளர்) – புனித விண்ணக அன்னை ஆலயம்;, முள்ளிக்குளம் பங்கு.
அருட்பணி.ம.டிலான்( சலேசிய சபை அருட்பணியாளர்) – ஆலங் குளம் குழந்தை இயேசு ஆலயம்;, காத்தான்குளம் பங்கு.