மன்னார் மடுமாதா திருத்தலத்தில் 2020ம் ஆண்டு ஆடி 02ந்திகதித் திருவிழாவுக்கான இரண்டாவது திட்டமிடல் கூட்டம் இன்று 25.06.2020 வெள்ளிக்கிழமை காலை மடுமாதா திருத்தலத்தின் புனித யோசேவ்வாஸ் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் ஒன்று கூடல் கூட்டத்திற்கு முன்னர்: தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2019ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மடுமாதா திருத்தலத்தில் 2020ம் ஆண்டு ஆடி 02ந்திகதித் திருவிழாவுக்கான இரண்டாவது திட்டமிடல் கூட்டம் இன்று 25.06.2020 வெள்ளிக்கிழமை காலை மடுமாதா திருத்தலத்தின் புனித யோசேவ்வாஸ் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் ஒன்று கூடல் கூட்டத்திற்கு முன்னர்: தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2019ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மடுமாதா திருத்தலப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அவர்களின் வழிநடாத்துதலின் கீழ் மடுத்திருத்தலத்திற்கு வருகை தரும் திருப்பயணிகளின் பாவனைக்காக நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட 42 களிப்பறைகள் மற்றும் குளியலறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆறு கட்டிடத் தொகுதிகளை ( 42ஓ06 ¡253) மன்னார் மாவட்டச் செயலாளர் மதிப்புக்குரிய திரு.சி.ஏ.மோகன்ராஸ் அவர்களின் அழைப்பின் பேரில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை அவர்களால் திறந்த வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார், மடுமாதா திருத்தலப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளார், மடுப் பிரதேசச் செயலர் செல்வி வினிஜித்தா கௌசிகன் மற்றும் மடுப் பிரதேச செயலகப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மடுமாதா திருத்தலத்தின் புனித யோசேவ்வாஸ் ஒன்று கூடல் மண்டபத்தில்; மன்னார் மாவட்டச் செயலாளர் மதிப்புக்குரிய திரு.சி.ஏ.மோகன்ராஸ் அவர்களின் தலைமையில் திருவிழாவுக்கான திட்டடமிடல் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேற்கூறப்பட்டவர்களோடு கிறிஸ்தவ சமய பணிகள் திணைக்களத்தின் இயக்குனர்; திருமதி சத்துரி பின்ரோ, மாந்தை பிரதேச சபை தவிசாளர் திரு ஆசீர்வாதம் சந்தியோகு,மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளா,; சுகாதாரத் திணைக்கள உயர் பொறுப்பு நிலைப் பணியாளர்கள், முப்படைகளின் பொறுப்பு நிலைப் பணியாளர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அரச தனியார் போக்குவரத்துப் பிரிவினர் மற்றும் பல்துறைசார் பொறுப்பு நிலைப் பணியார்களும் கலாந்து கொன்டு திருவிழாவுக்கான தங்கள் துறைசார் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.
அனைத்தின் முடிவில் ஒய்வுபெறும் மன்னார் மாவட்டச் செயலாளர் மதிப்புக்குரிய திரு.சி.ஏ.மோகன்ராஸ் அவர்களுக்கான மடுத்திருத்தலம் சார்பான சிறிய மதிப்பளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.