மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரான அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளார் தனது 90வது அகவையை 16.06.2020 அன்று நினைவு கூர்ந்தார். அதனை முன்னிட்டு இன்று 25.07.2020 வியாழக்கிழமை அருட்பணி ஜே.பி.தேவறாஜா அடிகளுக்கான பிறந்தநாள் மதிப்பளிப்பு நிகழ்வு மன்னாரில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் குழாம் இந் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது.மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த அருட்பணியாளரான அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளார் தனது 90வது அகவையை 16.06.2020 அன்று நினைவு கூர்ந்தார். அதனை முன்னிட்டு இன்று 25.07.2020 வியாழக்கிழமை அருட்பணி ஜே.பி.தேவறாஜா அடிகளுக்கான பிறந்தநாள் மதிப்பளிப்பு நிகழ்வு மன்னாரில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் குழாம் இந் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தது.
காலையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அருட்பணி ஜே.பி. தேவறாஜா அடிகளார் நன்றித் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். இன்றைய நிகழ்வுகளின்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களும் யாழ் மறைமாவட்ட ஆயர் பேருட்கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும் இளைப்பாறிய மற்றும் முன்னாள் மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப் பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசவ் ஜெபரெட்ணம் அடிகளாரும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளாரும் யாழ் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களும் பிரசன்னமாகியிருந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர். அத்தோடு அருட்பணி தேவறாஜா அடிகளாரின் மிக நெருங்கிய குடும்ப உறவினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
திருப்பலியின் போது மறையுரையை மன்னார் மறைமாவட்டக் குடும்பம் மற்றும் பொதுநிலையினர் பணி அருட்பணி மைய இயக்குனர் அருட்பணி ச.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் வழங்கினார். அருட்பணி ஜே.பி. தேவறாஜா அடிகளார் யாழ் மற்றும் மன்னார் மறைமாவட்டம் இலங்கை தேசிய திரு அவை மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கான அவருடைய மனித நேயப் பணி முதலியனவற்றையும் அருட்பணி ச.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் குறிப்பிட்டார்.
திருப்பலி முடிவில் சிறிய பிறந்த நாள் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. பின் மன்னார் ஆயர் இல்லத்தில் அருட்பணி ஜே.பி.தேவறாஜா அடிகளாருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. சிறப்பாக மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களும் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை குருமுதல்வர் அருட்பணி.அ.சேவியர் குரூஸ் அடிகளாரும் அருட்பணி ஜே.பி.தேவறாஜா அடிகளாரை வாழ்த்தி வரவேற்றனர். ஆதன் பின் மன்னார் ஆயர் இல்லத்தில் சிறிய மதிப்பளிப்ப நிகழ்வென்றும் இடம் பெற்றது.
அருட்பணி ஜோசவ் பெனடிக்ற் தேவறாஜா அடிகளாரின் 90வது அகவை தினமான 16.06.2020 அன்று யாழ் ஆயர் இல்லத்தில் அவருக்கான பிறந்தநாள் நன்றித் திருப்பலியை யாழ் மறைமாவட்டக் குருக்கள் ஒழுங்குபடுத்தி அவருடைய பணிக்காக அவரைப் பாராட்டி மதிப்பளிப்பு நிகழ்வொன்றினையும் முன்னெடுத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.