யாழ் மாகாண அமலமரித் தியாகிகள் துறவற சபையின் அருட்பணியாளரும் மன்னார் மறைமாவட்டத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றுபவருமான அருட்பணி.அல்பன் இராஜசிங்கம் அ.ம.தி அடிகளார் 22.07.2020 திங்கட்கிழமை இறைவன் கொடுத்த தனது 75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார். யாழ் மாகாண அமலமரித் தியாகிகள் துறவற சபையின் அருட்பணியாளரும் மன்னார் மறைமாவட்டத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றுபவருமான அருட்பணி.அல்பன் இராஜசிங்கம் அ.ம.தி அடிகளார் 22.07.2020 திங்கட்கிழமை இறைவன் கொடுத்த தனது 75வது அகவையை ஆன்மிக நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார்.
22.07.2020 திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லச் சிற்றாலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி.பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை, யாழ் அமதி முதல்வர் அருட்பணி எட்வின் வசந்தறாஜ் அடிகளார் மற்றும் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருட்பணியாளர்கள் , மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவறசபைகளின் பிரதிநிதிகள் இத் திருப்பலியில் பங்குபற்றி இறைவனுக்கு நன்றி சொல்லி அருட்பணி அல்லபன் அடிகளாரின் இறைபணி சிறப்பாகத் தொடர இறையருள் வேண்டினர். திருப்பலி முடிவில் சிறிய வாழ்த்தளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது.