நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெற சிறப்புத் திருப்பலி

உலகமெங்கும் வேகமாகப் பரவிப் பல உயிர்களை அள்ளிச் சென்று கொண்டிருக்கும் கொரோணா என்னும் கொள்ளை நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெறவும், இந்தக்  கொள்ளை நோய் உலகிலிருந்த அகலவும் இறையருள் வேண்டி மன்னார் தோட்ட வெளியில் அமைந்துள்ள மறைசாட்சியரின் அரசி அன்னை மரியாவின் திருத்தலத்தில் நேற்றைய தினம் 26.04.2020 ஞாயிற்றுக் கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இயேசுக் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டார்கள் என்பதற்காக 475 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட பல கத்தோலிக்க மக்களின் உடல்கள்  இத் திருத்தலத்தில் புதைக்கப்பட்டுள்ளன. இவர்களை மறைசாட்சியர் நிலைக்கு உயர்த்தப் பரிந்துரைகளும், வேண்டுகைகளும் முன்னொடுக்கப்பட்டு வரும் இவ்வேளையில் இத் திருத்தலத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட இத் திருப்பலி முக்கியம் வாய்ந்த  ஒரு ஆன்மிக செயலாக அமைந்துள்ளது.

வழிபாட்டின் தொடக்கத்தில் இத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்பணி.டே.அலெக்காண்டர் சில்வா (பெனோ) அடிகாளார் திருத்தலத்தைப்பற்றியும், இந் நாளில் ஒப்பக்கொடுக்கப்படும் திருப்பலி மற்றம் இத் திருப்பலியை இத் திருத்தலத்தில் ஒப்புக்கொடுக்கப்படுவதற்கான நோக்கம் பற்றியும் எடுத்துரைத்த பின் நற்கருணை ஆராதனை இடம்பெற்றது.

ஆதனைத் தொடர்ந்து கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் சிறப்புத் திருப்பலியை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய  மும் மொழிகளிலும் ஒப்புக்கொடுத்துச் செபித்தார். தனது மறையுரையில் கடவுளின் இரக்கம் நிட்சயம் நம்மைக் காப்பாற்றும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *