பூலார் குடியிருப்பில் இறையிரக்கப் பெருவிழா.

கீளியன் குடியிருப்புப் பங்கின் கிளை ஆலயமான பூலார் குடியிருப்பு புனித பவுல் ஆலயமானது நீண்டதொரு ஆன்மிக வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டதாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மன்னார்த் தீவில் இயேசுவின் திருத்தூதர்களின் பெயரில் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்டன, இவ் ஆலயங்கள் கத்தோலிக்க மக்கள் தங்கள் இறை நம்பிக்கையை வளர்க்க வாய்ப்பாக அமைந்தன. அவ்வாறமைந்த ஆலயங்களில் ஒன்றுதான் பூலார் குடியிருப்பு புனித பவுல் ஆலயமாகும். காலக்கரைதலில்  மக்களின் இடப்பெயர்வுகள், மற்றும் வேறு காரணங்களில் இவ்வாலயத்தில வழிபாடுகள் குறைந்தன, அத்தோடு இவ்வாலயத்தின் பயன்பாடும் குறைந்தது.

இதன் பின் அண்மைக் காலங்களில்  இடிந்துபோய் சில சுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அவ் ஆலயம் மீளுருவாக்கம் செய்யப்பட்டு வருவதோடு அவ்வாலயத்தில் இறை இரக்க வழிபாட்டுடிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய பங்குத் தந்தை அருட்பணி. ஜெஸ்லி ஜெகானந்தன் அடிகளாரின் அர்ப்பணிப்பான முயற்சியினால் நம் ஆண்டவர் இயேசுதாமே இறையிரக்கத்தின் மகிமையை அருட்சகோதரி புனித பவுஸ்தினாவுக்கு வெளிப்படுத்திய போலந்து நாட்டின் கிறாக்கோ நகரில் அமைந்துள்ள இரக்கத்தின் அன்னை மரியா அருட்சகோதரிகள் இல்லத்தில் அமைந்துள்ள இறை இரக்கத் திருத்தலத்தில் இருக்கும்  அருட்சகோதரி புனித மரிய பவுஸ்தினாவின் முதல் தர புனித அருட்பொருள் – திருப்பண்டம் கொண்டுவரப்பட்டு அவ் ஆலயத்தில் வைக்கப்பட்டள்ளது.

இவ் ஆலயத்தில் இவ் ஆண்டு சித்திரை 19ந் திகதி ஞாயிற்றுக்கிழமை (19.04.2020) இறை இரக்கத் திருவிழாவன்று மாலையில் இறை இரக்கத் திருச் செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருவிழாத் திருப்பலியும் இடம் பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றினார். சமகால நிலைமைகளுக்கு அமைவாக ஒரு சில அருட்பணியாளர்கள் மட்டுமே இத் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

மன்னார் மறைமாவட்டத்தில் இரண்டு இறை இரக்கத் திருத்தலங்கள் உள்ளமை குறிப்பிடத் தக்கது. ஒன்று வவுனியா மாவட்டத்திலுள்ள பம்பைமடுப் பங்கிலும், இரண்டாவது மன்னார் மாவட்டத்திலுள்ள கீளியன் குடியிருப்புப் பங்கின் பூலார் குடியிருப்பு என்னும் இடத்திலும் அமைந்துள்ளன. இந்த இரண்டு திருத்தலங்களிலுமே அருட்சகோதரி புனித மரிய பவுஸ்தினாவின் திருப்பண்டம் இருப்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *