மாதோட்டப் பகுதியின் மகுடமாக விளங்கும் மாந்தை நகரில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழா 15.02.2020 சனிக்கிழமை காலை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றினார்.

திருப்பலிக்கு முன்னர் மாந்தை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மணிக்கோபுரத்தினையும் ஆயர் அவர்கள் ஆசீர்வதித்துத் திறந்து வைத்தார். இவ் விழாவில் பெருந்தொகையான மக்களும்‚ பல் சமயப் பிரதிநிதிகளும்‚ அரச மற்றும் அரச சார்பற்ற பணியாளர்களும்‚ துறவிகளும்‚ அருட்பணியாளர்களும் கலந்து செபித்தனர்.
இத் திருத்தலத்தின் பங்குத் தந்தை அருட்பணி சூ.மரியதாஸ் லீயோன் அடிகளாரின் அர்பணிப்பான சேவையோடும்‚ மாந்தை மாதா பங்கு மற்றும் ஆலய சபைகளின் முழுமையான பங்களிப்போடும் இத் திருவிழா சிறப்பாக ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.