உலகெங்கும் பரந்து வாழும் கத்தோலிக்க திரு அவை நம் ஆண்டவர் இயேசு குழந்தைப் பருவத்தில் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட நிகழ்வை நினவு கூர்ந்து கொண்டாடும் இவ்வேளையில் மன்னார்ப் பேராலயப் பங்கின் துணை ஆலயமும் மன்னார் மாவட்டத்தின் நீண்டகால வரiலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டதுமான மன்னார் புனித மரியன்னை ஆலய விழா ( காணிக்கை அன்னை – இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்த விழா) இன்று காலை 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.உலகெங்கும் பரந்து வாழும் கத்தோலிக்க திரு அவை நம் ஆண்டவர் இயேசு குழந்தைப் பருவத்தில் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட நிகழ்வை நினவு கூர்ந்து கொண்டாடும் இவ்வேளையில் மன்னார்ப் பேராலயப் பங்கின் துணை ஆலயமும் மன்னார் மாவட்டத்தின் நீண்டகால வரiலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டதுமான மன்னார் புனித மரியன்னை ஆலய விழா ( காணிக்கை அன்னை – இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்த விழா) இன்று காலை 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை இன்றைய பெருவிழாத் விழாத் திருப்பலியை தலைமையேற்று ஒப்புக் கொடுத்தார். முதலில் ஆலய பிரதான நுழைவாயிலில் மெழுகு திரிகள் ஆசீர்வதிக்கப்பட்டபின் அனைவரும் பவனியாக ஆலய முகமண்டபம் வரை வந்த பின்னர் ஆலயத்தின் முக மண்டபத்தில் திருப்பலி நடைபெற்றது.
இங்கு மரையுரை வழங்கிய குருமுதல்வர் நம் மறைமாவட்டத்தில் புதுப்பித்தலின் அவசியத்தையும், உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துதோடு இவ் ஆலயமானது மிகவும் தொன்மையான ஆலயம் என்றும் இந்தியாவிலிருந்து வணிக நோக்கங்களுக்கான இங்கு வந்திருந்த மார்தோமா என்னும் வழிமரபினர் இவ்விடத்தில் சிறிய ஆலயம் அமைத்ததாகவும், அங்கிருந்த காணிக்கை அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட படம் மிகவும் புதுமை மிக்கது எனவும் வரலாற்றுப் பதிவுகளோடு எடுத்துரைத்தார்.
பல குருக்கள்,துறவிகள், அரச மற்றும் அரச சார்பற்ற பணி நிலைப் பிரமுகர்களும், பெருந்தொகையான இறைமக்களும் கலந்து செபித்தனர். பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் பேராலயத்தில் பணியாற்றும் ஏனைய குருக்களோடும்,பங்கில் பணியாற்றும் துறவிகளோடும் மற்றும் பங்கின் பல்வேறு பணிக்குழுக்களின் பங்களிப்போடும் திருவிழாவை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தினார்.
இன்று மாலை அன்னையின் திருவுருவப் பவனி மன்னார் நகரில் இடம் பெற்று முடிவில் அன்னையின் திருவுருவ ஆசீர் வழங்கப்படும்.