மன்னார் புனித மரியன்னை ஆலய விழா ( காணிக்கை அன்னை – இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்த விழா) நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் இன்று 01.02.2020 சனிக்கிழமை மாலைப் புகழ் ஆராதனை நடைபெற்றது.மன்னார் புனித மரியன்னை ஆலய விழா ( காணிக்கை அன்னை – இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்த விழா) நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் இன்று 01.02.2020 சனிக்கிழமை மாலைப் புகழ் ஆராதனை நடைபெற்றது.
மாலைப் புகழ் ஆராதனையை பேராலய இணைக்குரு அருட்பணி.மொ.போ.பீற்றர் மனேகரன் பாடகர் குழாமினரரோடு இணைந்து வழிநடாத்தினார். மன்னார் ஆயரின் செயலர் அருட்பணி நீக்லஸ் அடிகளார் திருப்புகழ்மாலையை தொடக்கிவைத்தார். அவரோடு மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி கிறிஸ்து நேசரெட்ணம் அடிகளார் வழிபாட்டில் பங்கேற்றார்.
தோடர்ந்து இடம் பெற்ற நற்கருணை வழிபாட்டில் மடு புனித வியான்னி தி’யான இல்லத்தின் இயக்குனர் அருட்பணி நியூட்டன் அடிகளார் நடாத்தினார். இறுதியில் நற்கருணைப் பவனி இடம் பெற்றது. நுற்கருணை ஆசீரை திருவுளப் பணியாளர் சபையைச் சேர்ந்த அருட்பணி.அ.பிலிப் அடிகளார் வழங்கினார்: