நீண்டதொரு விசுவாசப் பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ள மன்னார் மறைமாவட்டம், தன்னாட்சிப் பணிக்கான ஒரு மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டதன் 39ம் ஆண்டு நிறைவு விழா நேற்று 2020.01.25 சனிக்கிழமை தோட்டவெளி புனித மறைசாட்சியர் அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
நீண்டதொரு விசுவாசப் பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ள மன்னார் மறைமாவட்டம், தன்னாட்சிப் பணிக்கான ஒரு மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டதன் 39ம் ஆண்டு நிறைவு விழா நேற்று 2020.01.25 சனிக்கிழமை தோட்டவெளி புனித மறைசாட்சியர் அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
நேற்றுக்காலை ஆலயத்தின் நுழைவாயிலில் வைத்து புனித மறைசாட்சியர் அன்னை திருத்தலத்தின் அதிபர் அருட்பணி.டே.அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் அருட்பணியாளர்கள்,துறவிகள், அரச அரச சார்பற்ற பணி மையங்களின் உயர் நிலைப் பணியாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இறைமக்கள் பிரசன்னமாகியி’ருக்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை வரவேற்றார்.
தொடர்ந்து தோட்டவெளி புனித யோசேவ்வாஸ் மகாவித்தியாலய மாணவர்களின் மேற்கத்திய இசைக்கருவிகளின் மகிழ்வெலியோடு ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து ஆயர்கள் அவர்கள் மன்னார் மறைசாட்சிகளின் விதைகுழித் தோட்டத்தில் சில நிமிடங்கள் செபித்தபின் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.
இத் திருவிழாத் திருப்பலியில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்கரர் சோசை அவர்கள் மன்னார் மறைமாவட்டத்தின் சமகாலத்திற்குரிய அருட்ப்பணித் திட்ட மான புதுப்பித்தலின் முக்கியத்துவம், செயலாக்கம் பற்றிய இறைவார்த்தை விழுமியங்களோடு இணைந்த மறையுரையினை வழங்கினார்.
காணிக்கை வேளை மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்துப் பங்குச் செயலர்களும், மறைமாவட்டப் பணிக்குழுக்களின் பிரதிநிதிகளும் இவ்வாண்டிற்கான தங்கள் பங்குகளிலும், மறைமமாவட்டப் பணிக்குழுக்களிலும் முன்னெடுத்துச் செல்லவுள்ள புதுப்பித்தல் அருட்பணித் திட்ட முன்மொழிவுகளை ஆயர் அவர்களிடம் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தனர்.