மன்னார் புனித செபஸ்தியார் பேராலய இறைமக்கள் தங்கள் பாதுகாவலராம் புனித செபஸ்தியாரின் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகளின் இறுதி நாளாகிய நேற்று ( 19.01.2020) ஞாயிற்றுக் கிழமை கத்தோலிக்க திரு அவையின் திருவழிபாட்டு திருமரபைப் பின்பற்றி மாலைப்புகழ் ஆராதனையை நடாத்தினர்.

உதவிப் பங்குத் தந்தை அருட்பணி.ஜெஸ்மன்றாஜ் அடிகளாhர் மாலைப்புகழ் வழிபாட்டினை மன்னார் பேராலயப் பாடகர் குழுவினரின் பங்களிப்போடு முன்னெடுத்துச் சென்றார்.பங்குத் தந்தை அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளார் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தியிருந்தார்.
பல அருட்பணியாளர்களும், துறவிகளும், இறைமக்களும் இத் திரு நிகழ்வில் கலந்து செபித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நற்கருணை ஆராதனையில் மட்டக்களப்பு தேற்றாத் தீவு புனித யூதா ததேயு திருத்தல இயக்குனர் அருட்பணி நிர்மலன் அடிகளார் இறை வார்த்தையைப் பகிர்ந்து வழிபாட்டை முன்னெடுத்துச் சென்றார். இறுதி நற்கருணை ஆசீரை மன்னார் மறைமாவட்ட அன்பியம் மற்றும் திருத் தந்தையின் மறைபரப்புச் செயற்திட்டங்களுக்கான இயக்குனர் அருட்பணி.ச.சவுல்நாதன் அடிகளார் வழங்கினார்.