மறைசாட்சிகள் நமது நம்பிக்கையின் ஆணி வேர்களாக இருக்கின்றார்கள்”
மறைசாட்சியான புனித செபஸ்தியாரின் திருவிழா இன்று 20.01.2020 திங்கட்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்; ஆன்மிகச் செழுமையோடு பங்குத் தந்தை அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் வழிகாட்டதலிலும் ஒழுங்கமைப்பிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மறைசாட்சியான புனித செபஸ்தியாரின் திருவிழா இன்று 20.01.2020 திங்கட்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்; ஆன்மிகச் செழுமையோடு பங்குத் தந்தை அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் வழிகாட்டதலிலும் ஒழுங்கமைப்பிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். ஆயரோடு பல அருட்பணியாளர்களும் இணைந்து திருவிழாத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
திருவிழாவின் போது இறைவாத்தையைப் பகிர்ந்து அருளுரை வழங்கிய மன்னார் ஆயர் அவர்கள் “நமது திரு அவையில் காலந்தோறும் இறைவனால் நமக்கு வழங்கப்படும் மறைசாட்சிகள் நமது நம்பிக்கையின் ஆணி வேர்களாக இருக்கின்றார்கள்”; என்று எடுத்துரைத்தார். அத்தோடு 475 ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துவுக்காக கொல்லப்பட்ட நம் மன்னார் திரு அவையின் மைந்தர்கள் இன்னும் சிறிது காலத்தில் இறை அடியார்களாக அறிவிக்கப்படவுள்ளார்கள் என்பதையும் எடுத்துக் கூறினார்
பெருந்தொகையான இறைமக்களும் துறவிகளும் இத் திருவிழாத் திருப்பலியில் கலந்து செபித்தனர். இறுதியில்: பேராலயத்தில் சில திருத்த வேலைகள் நடைபெற்று பேராலயம் புனரமைக்கப்படவுள்ளதால், பேராலயத்தில் சில பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது எனவும், பேராலயத்தின் இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்திலேயே இனி வழிபாடுகள் நடைபெறுமெனவும், திவ்விய நற்கருணை அங்கே வழிபாட்டிற்காகவும், வணக்கத்திற்காகவும் வைக்கப்பட்டுள்ளது எனவும் ஆயர் அவர்கள் இறைமக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.