புனித செபஸ்தியாரைப் பாதுகாவலராகக் கொண்டுள்ள மன்னார் பேராலய மக்கள் தங்கள் பாதுகாவலரின் திருவிழாவைக் கொண்டாடும் ஆன்மிக நிகழ்வின் முதற்கட்டமாக நேற்று (11.01.2020) சனிக்கிழமை புனிதரின் கொடியை உயர்த்தும் திருநிகழ்வோடு ஆயத்த வழிபாடுகளுள் நுழைந்தனர்.

நேற்று (11.01.2020) சனிக்கிழமை மாலையில் பங்குத்தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளாரால் புனித செபஸ்தியாரின் கொடி ஆசிர்வதிக்கப்பட்டு உயர்த்தும் நிகழ்வு பேராலய முன்பகுதியில் நடைபெற்றது. பங்குமக்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து செபித்தனர். தொடர்சியாக நடைபெறவுள்ள ஆயத்த வழிபாடுகளைத் தொடர்ந்து 19.01.2020ஞாயிற்றுக்கிழமை மாலைப் புகழ் வழிபாடும் 20.02.2020 திங்கட்கிழமை திருவிழாத் திருப்பலியும் அன்று மாலை புனித செபஸ்தியாரின் திருவுருவப் பவனியும் இடம்பெறும்.