மன்னார் புனித சவோரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை தனது 150ம் ஆண்டு யூபிலி விழாவை

தனது கல்விப் பணிப்பாதைகளிலே 150 வருடங்களைப் பதிவு செய்துள்ள மன்னார் மாவட்டத்தின் முதல் கல்லூரியும், பல கல்விமான்களை உருவாக்கியதுமான மன்னார் புனித சவோரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை தனது 150ம் ஆண்டு யூபிலி விழாவை இவ்வாண்டு கொண்டாடுகின்றது. இவ் யூபிலி விழாவை வரலாற்றுச் சிறப்போடும் பதிவுகளோடும் கொண்டாடும் முகமாக கல்லூரிச் சமூகம், பழைய மாணவர் குழாம் ஆகியோரின் பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் கடந்த வருடம் தொடக்கம் பல நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றன.தனது கல்விப் பணிப்பாதைகளிலே 150 வருடங்களைப் பதிவு செய்துள்ள மன்னார் மாவட்டத்தின் முதல் கல்லூரியும், பல கல்விமான்களை உருவாக்கியதுமான மன்னார் புனித சவோரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை தனது 150ம் ஆண்டு யூபிலி விழாவை இவ்வாண்டு கொண்டாடுகின்றது. இவ் யூபிலி விழாவை வரலாற்றுச் சிறப்போடும் பதிவுகளோடும் கொண்டாடும் முகமாக கல்லூரிச் சமூகம், பழைய மாணவர் குழாம் ஆகியோரின் பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் கடந்த வருடம் தொடக்கம் பல நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக இன்று (11.01.2020) சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு கல்லூரி நுழைவாயிலிருந்து நடைபவனி ஆரம்பமானது. இப் நடைப்பவனி மன்னார் தலைமன்னார் வீதி வழியாக எழுத்தூர் சந்தியை அடைந்து, அதன் பின்னர் மன்னார் தாழ்வுபாடு வீதி வழியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைச் சந்தியை வந்தடைந்து பின்னார் மன்னார் பனித செபஸ்தியார் பேராலய வீதியூடாக மன்னார் நகர மையத்தை வந்தடைந்தது. இவ்வேளையில் கல்லூரியின் கொடியைத் தாங்கிய உலங்கு வானூர்தி மன்னார் நகரைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதா இருந்தது.

பெருந்தொகையான மாணவர்களும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும் கல்லூரியின் நிறங்களால் வடிவமைக்கப்பட்ட ஒரே விதமான ஆடைகளை அணிந்து கலந்து கொண்ட இவ் நடைபவனி வானவில்வின் நிறங்களாக காட்சியளித்தது. அலங்காரங்களும், வேடிக்கை நிகழ்வுகளும், இசை முழுக்கமும், இந் நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டின. அனைத்து நிகழ்வுகளும் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் றெஜினோல்ட் அவர்களின் தலைமையில் சீராகவும், சிறப்பாகவும் நடைபெற்று முடிந்தது. பெருந்தொகையான பொதுமக்கள், வர்ண ஜாலங்கள் நிறைந்த இச்; சிறப்பு நிகழ்வை கண்டு அதிசயித்தும், இரசித்தும் நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *