2020ம் ஆண்டிற்கான புதுவருட நள்ளிரவுத் திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. 2020ம் ஆண்டிற்கான புதுவருட நள்ளிரவுத் திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.
அன்னைமரியான அமைதியின் அரசி என்னும் மையப் பொருளோடு கொண்டாடப்படும் இத் திருப்பலியில் பல அருட்பணியாளர்கள் ஆயரரோடு இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
புனித செபஸ்தியார் பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் நெறிப்படுத்தலில், துறவிகள் மற்றும் பங்குப் பணிக்குழுக்கள் அனைத்தும் இணைந்து சிறப்பாக வழபாட்டு ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர். பெருந்தொகையான இறைமக்கள் இப் பெருவிழாத் திருப்பலியில் பங்கேற்றுச் செபித்து இறையருள் பெற்றுச் சென்றனர்.