கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டிய ஒன்று கூடல்

ன்னார் மறை மாவட்டத்தில் பணியாற்றும் அருட்பணியாளர் மற்றும் துறவிகளுக்கான கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டிய ஒன்று கூடல் 16.12.2019 திங்கட்கிழமை  காலை 10.00 மணிக்கு மன்னார் புனித யோசேவ்வாஸ் குடும்பம், பொது நிலையினர் அருட்பணி மையத்தில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருட்பணியாளர் மற்றும் துறவிகளுக்கான கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டிய ஒன்று கூடல் 16.12.2019 திங்கட்கிழமை  காலை 10.00 மணிக்கு மன்னார் புனித யோசேவ்வாஸ் குடும்பம், பொது நிலையினர் அருட்பணி மையத்தில் நடைபெற்றது.

மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் பிரசன்னத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை மற்றும் பெருந்தொகையான அருட்பணியாளர்களும், துறவிகளும் கலந்து செபத்திலும், தியானத்திலும் இணைந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட மன்னார் ஆயர் அவர்கள் மறைமாவட்டத்தில் பணியாற்றம் அனைத்து ; அருட்பணியாளர் மற்றும் துறவிகளுக்கும் தனது நன்றியையும், வாழ்த்தினையும் தெரிவித்ததோடு தொடர்ந்தும் நற்செய்தி மையப்படுத்திய ஆழமான அர்பணிப்போடும் , ஆர்வத்தோடும் பணிசெய்வதற்கான ஒரு வேண்டுகையையும் முன்வைத்தார். அனைத்து நிகழ்வுகளையும் மன்னார் மறைமாவட்டத் திருவழிபாட்டுப் பணிக்குழு இயக்குனர் அருட்பணி.பி.கிறிஸ்துநாயகம் அடிகள் ஒழுங்கமைப்புச் செய்திருந்தார்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *