மன்னார் மறைமாவட்ட திருவழிபாட்டு அருட்பணி மையம் 11.12.2019 புதன்கிழமை மன்னார், முருங்கள், மடு மறைக்கோட்டத்திலுள்ள கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பண்டக் காப்பாளர்களாகவும், வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்கின்றவர்களாகவும் இருந்து பணியாற்றுபவர்களுக்கான( சக்கிறிஸ்ரன்) பயிற்சியையும், ஒன்று கூடலையும் ஒழுங்குபடுத்தி வழங்கியது.

மன்னார் மறைமாவட்ட திருவழிபாட்டு அருட்பணிகளுக்கான இயக்குனர் அருட்பணி.பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரின் நெறிப்படுத்துதலில் இந் நிகழ்வு நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் நிகழ்வைத் தொடக்கி வைக்க அருட்பணி இ.அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகள் பயிற்சி உரையை வழங்கினார். இறுதி நிகழ்வின் போது பிரசன்னமாகியிருந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை சிறப்பான விதத்திலே திருவழிபாடு பற்றியும் திருவழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் புனிதப் பொருட்கள் பற்றியும் தெளிவான ஒரு விளக்கத்தை புனிப் பொருட்களைக் காட்சிப்படுத்தி வழங்கினார். இறுதியில் கலந்த கொண்ட அனைவருக்கும் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதோடு ஆயரின் ஆசியுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.