தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயப் பங்கின் துணை ஆலயமாகத் திகழும் தலைமன்னார்த் துறை புனித சதா சகாய அன்னை ஆலயத்தைச் சேர்ந்த அருட்சகோதரி றொசானி பெனாண்டோ கிளறீசியன் துறவறசபையில் இணைந்து தனது இறுதி அர்ப்பணத்தை 03.12.2019 செவ்வாய்க்கிழமை கொழும்பு இராஜகிரிய என்னும் இடத்தில் அமைந்துள்ள அவர்களது துறவற இல்லத்தின் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியின் போது மனமுவந்து வழங்கினார்.

இவர் தனது கிராமமான தலைமன்னார்த் துறை புனித சதா சகாய அன்னை ஆலயத்தில் 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை தனது உறவினர்களோடும், ஆலய மற்றும் பங்கு மக்களோடும் இணைந்து நன்றித் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். மன்னார் மறைமாவட்டத்திலிருந்து கிளறீசியன் அருட்சகோதரிகளின் துறவற சபைக்குத் தன்னை அர்ப்பணித்த முதல் அருட்சகோதரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி. இ. அகஸ்ரின் புஸ்பறாஜ் அனைத்து நிகழ்வுகளையும் ஆலய அருட்பணிப் பேரவையோடும், பங்கில் பணியாற்றும் திருக்குடம்பக் கன்னியர் அருட்சகோதரிகளோடும், ஆலய மக்களோடும் இணைந்து சிறப்பாக ஒழுங்குபடுத்தியிருந்தார்.