அருட்பணித் திட்டமிடல் மாநாடு 21 – 23.11.2019

அன்பிய வாழ்வினூடாக கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சியை நோக்கி  என்னும் இலக்கை புதுப்பித்தலுக்கான தளமாகக் கொண்டு, இயேசு காட்டும் ஆன்மிகப் பதிவுகளை வாழவேண்டுமென்ற வாஞ்சையோடு மன்னார் மறைமாவட்டம் வருடந்தோறும் நடாத்திவரும் அருட்பணித் திட்டமிடல் மாநாடு 21 – 23.11.2019

அன்பிய வாழ்வினூடாக கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சியை நோக்கி  என்னும் இலக்கை புதுப்பித்தலுக்கான தளமாகக் கொண்டு, இயேசு காட்டும் ஆன்மிகப் பதிவுகளை வாழவேண்டுமென்ற வாஞ்சையோடு மன்னார் மறைமாவட்டம் வருடந்தோறும் நடாத்திவரும் அருட்பணித் திட்டமிடல் மாநாடு 21 – 23.11.2019 வரை மன்னார் மறைமாவட்ட குடும்பம், பொது நிலையினர் அருட்பணி மையத்தில் நடைபெற்றது. மன்னார் ஆயர், குருக்கள், துறவிகள், இறைமக்கள் பிரதிநிதிகள் என 190 பிரதிநிதிகள் இம் மாநாட்டில் கலந்து புதுப்பித்தலுக்கான திட்டங்களை வகுத்தனர்.

இயேசுவின் உயிர்ப்பிக்குப் பின் தூய ஆவியானவரின் அருட்பொழிவோடு உருவான தொடக்ககாலத் திருச் அவையின் துல்லியமான வாழ்வை வாழ அனைவரையும் உந்தித் தள்ளுவதற்கென  பரிந்துரைக்கப்பட்டு, நடைமுறைவாழ்விற்கான சவாலாக இருக்கும்  அன்பியங்கள் மன்னார் மறைமாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பலன் தந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், மன்னார் மறைமாவட்டத்தில்;  அன்பிய வாழ்வியல் அனுபவம் மீளவும் வாழப்படவேண்டுமென்ற மீள் சிந்தனை  உறுதிப்படுத்தப்பட்டதன் 25வது ஆண்டை அடுத்த ஆண்டில் நினைவு கூரவிருக்கும் இந்நிலையில், இம் மாநாடு பல ஆன்மிக மறுமலர்ச்சிச் திட்டங்களை முன்மொழிவு செய்துள்ளது.

கத்தோலிக்க பொது நிலையினரும், குருக்கள், துறவிரும் ஆர்வத்தோடு இம் மாநாட்டில் பங்கேற்றுப் பங்களிப்புச் செய்திருந்தனர். இம் மாநாட்டிற்கான வளவாளராக இந்தியாவிலிருந்து வந்திருந்த முற்போக்கு ஆன்மிக சிந்தனையாளரும், இயேசு சபைத் துறவியுமான அருட்பணி போல் ஜெறி அவர்கள் பங்களிப்புச் செய்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *