போலந்து நாட்டின் கிறாக்கோ பகுதியில் அமைந்துள்ள நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து இறை இரக்கத்தின் பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு அருட்சகோதரி புனித பவுஸ்தினாவிடம் கேட்டுக் கொண்ட இடத்திலுள்ள ஆலயத்திலிருந்து அருட்சகோதரி பவுஸ்தினாவின் திருப்பண்டம் அருட்பணி லெஸ்லி ஜெகாந்தன் அடிகளாரின் அயரா முயற்சியினால் மன்னார் மறைமாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.போலந்து நாட்டின் கிறாக்கோ பகுதியில் அமைந்துள்ள நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து இறை இரக்கத்தின் பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு அருட்சகோதரி புனித பவுஸ்தினாவிடம் கேட்டுக் கொண்ட இடத்திலுள்ள ஆலயத்திலிருந்து அருட்சகோதரி பவுஸ்தினாவின் திருப்பண்டம் அருட்பணி லெஸ்லி ஜெகாந்தன் அடிகளாரின் அயரா முயற்சியினால் மன்னார் மறைமாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இத் திருப்பண்டம் இன்று (01.11.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற அனைத்துப் புனிதர்களின் பெருவிழாத்; திருப்பலியினைத் தொடர்ந்து மன்னார் ஆயரிடம் கையளிக்கப்பட்டது. இத் திருப்பண்டம் இன்று மாலை 03.00 மணிவரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இறைமக்களின் பக்தி முயற்சிகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.