கிறிஸ்தவ சமயப் பணிகள் திணைக்களம், தேசிய மறைக்கல்வி நிலையத்தின் ஆலோசனையுடனும், வழிகாட்டலுடனும்;, மறைமாவட்ட மறைக்கல்வி அருட்பணி மையங்களுடாக 2019.09.12ந் திகதியன்று நடாத்திய தேசிய மட்ட திருவிவிலியப் போட்டியில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 65 மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று பரிசுபெறத் தகுதி பெற்றனர்.
கிறிஸ்தவ சமயப் பணிகள் திணைக்களம், தேசிய மறைக்கல்வி நிலையத்தின் ஆலோசனையுடனும், வழிகாட்டலுடனும்;, மறைமாவட்ட மறைக்கல்வி அருட்பணி மையங்களுடாக 2019.09.12ந் திகதியன்று நடாத்திய தேசிய மட்ட திருவிவிலியப் போட்டியில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 65 மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று பரிசுபெறத் தகுதி பெற்றனர்.
கீழ்ப்பிரிவிலிருந்து 46 பேரும், மேற்பிரிவிலிருந்து 19 பேரும் என மொத்தமாக 65 மாணவர்கள் தேசிய ரீதியினான பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். நமது மறைமாவட்டத்தின் அதி உச்ச மதிப்பெண்ணாக கீழ்ப்பிரிவில் 95 மதிப்பெண்ணும், மேற்பிரிவில் 94 மதிப்பெண்ணும் பதிவாகியுள்ளது. அத்தோடு தேசியமட்டத்திலான திருவிவிலிய பேச்சுப்போட்டியில் ஆங்கிலப்பிரிவில் இரண்டாம், மூன்றாம் இடங்களும், தமிழ்ப் பிரிவில் அரண்டாம் இடமும் கிடைக்கப்பெற்றன.
இவர்களுக்கான பரிசளிப்புவிழா 12.10.2019 ல் கண்டி, கட்டுகஸ் தோட்ட புனித ஆந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது. இவ் விழாவில் குருநாகல் மறைமாவட்ட ஆயரும், இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் திருவிவிலியம், மறைக்கல்வி, கல்வி அருட்பணிகளுக்கான தலைவருமான பேரருட் கலாநிதி கரல்ட் அந்தனி ஆண்டகை அவர்களும், கண்டி மாவட்டச் செயலர்அவர்களும், சுற்றுலாத்துறை மற்றும் வனஐPவராசிகள் அமைச்சின் செயலர், திருவிவிலியம், மறைக்கல்வி, கல்வி அருட்பணிகளுக்கான தேசிய இயக்குனர் பெனற் சாந்த அடிகளாரும், கிறிஸ்தவ மத பணிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சத்துரி பின்ரோ அவர்களும் மற்றும் பல அருட்பணியாளர்கள், துறவிகள், மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தங்கள் அர்ப்பணமான வழிநடாத்துதலுக்கும், தயாரிப்புக்கும், கடின உழைப்புக்கும் அருட்பணியாளர்கள், துறவிகள், மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம். அத்தோடு இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும், பரிசில்பெற தகுதி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களும், ஆசிரும்.