சிறப்புத் தூதுரைப் பணி மாதம் 2019 ஜப்பசி  பற்றி

சிறப்புத் தூதுரைப் பணி மாதம் 2019 ஜப்பசி  பற்றி நீங்கள் அறிய வேண்டிய விடயங்கள்.

1.இந்த மாதமும் பணியும்.

1919ம் ஆண்டு திருத்தந்தை 15ம் பெனடிக்ற் அவர்கள் வெளியிட்ட மறைத்தூதுப் பணியின் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் ( மாற்.16:15) என்னும் இயேசுவின் வார்த்தைகளை மையப்படுத்தியதான முதல் திருமடலாகிய  ஆயஒiஅரஅ ஐடடரன  (அந்தத் தருணம்;) என்னும் திருத்தூதுப்பணி திருமடல் வெளியிட்டதன் நூற்றாண்டினை மையப்படுத்தி தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2019 ஜப்பசி மாதத்தை  சிறப்புத் தூதுரைப்பணி மாதமாகப் பிரகடனம் செய்துள்ளார்.

2.இதற்கான கருத்துக் குறியீடு.

நற்செய்தி அறிவிப்புச் சிலுவை – உலகின் நான்கு கண்டங்களையும் குறிக்கின்றது.

வெளிப்படையான அல்லது எல்லையற்ற உலகம்:– நற்செய்திக்கு வரையறை எதுவும் கிடையாது.

பல வர்ணச் சிலுவை:– உயிர்ப்பு.

திருமுழுக்குப் பெற்று அனுப்புதல்:-கிறிஸ்தவத் திருமுழுக்கினதும், நற்செய்தியைப் பறைசாற்றுவதினதும் அடிப்படை அடையாளம்.

3.ஜப்பசி 2019.

மறை பரப்புப் பணியில் காத்திரமான பங்களிப்பைச் செய்த புனிதர்களின் நினைவு நாட்களை உள்ளடக்கியது இம் மாதம். ( சிறு மலர் என அழைக்கப்படும் புனித திரேசாளுடன் இது ஆரம்பமாகின்றது)

இம் மாதம் திருச் செபமாலையின் மாதம்.

இம் மாதம் 20ந் திகதி நாம் மறைபரப்பத் தினத்தைக் கடைப்பிடிக்கின்றோம்.

4.இம் மாதத்திற்கான முக்கிய நான்கு செயலாக்கம்.

இறைவார்த்தையிலும், நற்கருணையிலும் இயேசுவைச் சந்தித்தல். இயேசுவை அனுபவித்தல்.

புனிதர்களுடையவும், ஏனையவர்களுடையவும் நற்செய்தி அறிவிப்பு பணியையும், முன்னுதாரணங்களையும்  உணர்ந்து, அனுபவித்து  சாட்சியம் பகர்தல்.

திருவிவிலியம், மறைக்கல்வி, ஆன்மிகம், இறையியல் சார் நற்செய்திய அறிவிப்புப்பணி உருவாக்கம் வழங்குதல்.

நற்செய்தி அறிவிப்பு இரக்கச் செயல்கள்.

5.நற்செய்தி அறிவிப்புத் திருச் செபமாலை:-

திருப்பீடத்தின் ஒப்புதல் பெற்று, திருப்பீடத்தின் நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவராவிருந்த பேராயர் அருளாளர் புல்ரன் ஷீன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நற்செய்தி அறிவிப்புத் திருச் செபமாலையை செபித்தல்.

நற்செய்தி அறிவிப்புத் திருச் செபமாலையை செபிப்பதன் மூலம் ஒருவர் முழு உலகிற்குமாகச் ( ஜந்து கண்டங்கள்) செபிக்கின்றார்.

குறியீட்டு ஓவியத்திலுள்ள மஞ்சள் நிறம் ஆசியக் கண்டத்தையும்,வெள்ளை நிறம் ஜரோப்பாக் கண்டத்தையும், நீல நிறம் ஓசானியாக் கண்டத்தையும், பச்சை நிறம் ஆபிரிக்கக் கண்டத்தையும், சிவப்பு நிறம் அமெரிக்காக் கண்டத்தையும் குறித்து நிற்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *