இதயம் நிறைந்த அன்னையாக விளங்கும் மடுமாதாவின் திருவிழா

உலகக் கத்தோலிக்க திரு அவையானது அன்னை மரியாவின் விண்ணேற்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ் வேளையில், இலங்கை மக்களின் இதயம் நிறைந்த அன்னையாக விளங்கும் மடுமாதாவின் திருவிழா இன்று 15.08.2019 வியாழக்கிழமை நடபெற்று முடிந்தது. உயிர்ப்பு ஞாயிறுக் குண்டுவெடிப்பின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, எதிர்மறை ஊகங்கள், பொய்யான செய்திகள், பாதுகாப்புப் பிரிவின் மிக இறுக்கமான பாதுகாப்பு முன்னெடுப்புக்கள்; இத்தனைக்கும் மத்தியில் எதனையும் பொருட்படுத்தாது உலகக் கத்தோலிக்க திரு அவையானது அன்னை மரியாவின் விண்ணேற்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ் வேளையில், இலங்கை மக்களின் இதயம் நிறைந்த அன்னையாக விளங்கும் மடுமாதாவின் திருவிழா இன்று 15.08.2019 வியாழக்கிழமை நடபெற்று முடிந்தது. உயிர்ப்பு ஞாயிறுக் குண்டுவெடிப்பின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, எதிர்மறை ஊகங்கள், பொய்யான செய்திகள், பாதுகாப்புப் பிரிவின் மிக இறுக்கமான பாதுகாப்பு முன்னெடுப்புக்கள்; இத்தனைக்கும் மத்தியில் எதனையும் பொருட்படுத்தாது மடு அன்னைக்கு நன்றி சொல்லவும், அவரிடமிருந்து ஆசிர் பெறவும் மொழி, மதம் ஆகிய அனைத்தையும் கடந்து சுமார் ஜந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறை நம்பிக்கையோடு இத் திருவிழாத் திருப்பலியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. இத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொ. பேப்பி சோசை அடிகளார் அனைத்து திருவிழா செயற்பாடுகளையும் சிறப்பாக ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தினார்.

இன்றைய திருவிழத் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், பதுளை மறைமாவட்ட ஆயருமான பேரருட்கலாநிதி வின்ஸ்ரன் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் முதன்மை திருவிழாத் திருப்பலி நிறைவேற்றுனராகக் கலந்து கொள்ள, குருநாகல் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி கரல்ட் அன்ரனி ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அண்றாடி ஆண்டகை அவர்களும் பெருந்தொகையான அருட்பணியாளர்களும்,துறவிகளும், இறைமக்களும் இப் திருவிழாத் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

தமிழில் மறையுரை வழங்கிய மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள்: அனைத்து மக்களும் உடல் நலமும், பாதுகாப்பும், மகிழ்ச்சியும், அமைதியும் பெற்று வாழ அனைவரையும் வாழ்த்தி, அனைவருக்காகவும் செபிப்பதாகவும் கூறினார். தொடர்ந்து மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா தரும் ஆன்மிக சிந்தனையையும், அதன் வரலாற்றுப் பதிவுகளையும் எடுத்துக் கூறினார்.அத்தோடு இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் அண்மையில் வெளியான அறிக்கையை மேற்கோள் காட்டி: உயிர்ப்புப் பெருவிழாத் தினத்தன்று நடைபெற்ற குண்டுவெடிப்பின் விசாரணைகள் மட்டில் இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவை அதிருப்தியையும், மன வேதனையையும் தெரிவிப்பதாகவும் இக் கொடிய செயலின் காரணர்கள் பாகுபாடின்றி கண்டறியப்பட்டு, நீதியானதும், உண்மையானதுமான விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டு, நீதி வழங்கப்படவேண்டுமென்றும், குண்டு வெடிப்பின் பின்னரான இலங்கை அரசின் அனைத்து உதவிகளுக்ககாவும் நன்றி தெரிவிப்பதாகவும் அவ் அறிக்கையின் உட்கருத்தை சுருக்கமாக வெளிப்படுத்தியதோடு, எதிர்வரும் புரட்டாதி மாதம் 08ம் திகதி அன்னை மரியாவின் திருவிழாத் தினத்தன்று நமது நாட்டின் இயல்பு வாழ்வுக்காகவும், அமைதிக்காகவும் இதய சுத்தியோடு கூடிய தவமும், ஒறுத்தலும் நிறைந்த தொடர் செப வழிபாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான குருக்களும், துறவிகளும், , மக்களும், அரச, அரச சார்பற்ற, அரசியல் துறைசார்ந்தவர்களும் அன்னையின் பக்தர்களாக வருகை தந்து இறையருள் பெற்றனர். திருவிழா அன்னையின் திருவுருவப் பவனியோடும், அன்னையின் திருவுருவ ஆசீராடும் நிறைவுற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *