மடுமாதா திருத்தலத்தில் நாளை 15ம் திகதி நடைபெறவுள்ள அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவிற்கான ஆயத்த நாளின் இறுதி நாளான இன்று மாலை 14.08.2019 புதன்கிழமை வேஸ்பர் மாலை திருப்புகழ் ஆராதனை நடைபெற்றது.
மடுமாதா திருத்தலத்தில் நாளை 15ம் திகதி நடைபெறவுள்ள அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவிற்கான ஆயத்த நாளின் இறுதி நாளான இன்று மாலை 14.08.2019 புதன்கிழமை வேஸ்பர் மாலை திருப்புகழ் ஆராதனை நடைபெற்றது.
இத் திருநிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களும், இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், பதுளை மறைமாவட்ட ஆயருமான பேரருட்கலாநிதி வின்ஸ்ரன் பெனாண்டோ ஆண்டகை, குருநாகல் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி கரல்ட் அன்ரனி ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அண்றாடி ஆண்டகை அவர்களும் பெருந்தொகையான அருட்பணியாளர்களும்,துறவிகளும், இறைமக்களும் கலந்து கொண்டனர்.
இன்றைய வழிபாட்டின் ஆசிரை குருநாகல் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி கரல்ட் அன்ரனி ஆண்டகை அவர்கள் வழங்கினார்கள்.