அருட்சகோதரி ஜேம்ஸ் கூஞ்ஞ அவர்களின் நல்லடக்கத் திருப்பலி

ண்மையில் காலமான திருக்குடும்ப சபையின் அருட்சகோதரி  ஜேம்ஸ் கூஞ்ஞ அவர்களின் நல்லடக்கத் திருப்பலி இன்று 07.08.2019 புதன்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. இத் திருப்பலியை அருட்சகோதரி அவர்களின் உறவினர்களும், கிராமத்தைச் சேர்ந்தவர்களுமான அருட்பணி ச.ஜெயறாஜன் கூஞ்ஞ, அருட்பணி அ.லக்ஸ்ரன் டீ சில்வா ஆகியோரோடு மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளாரும் இணைந்து ஒப்புக் கொடுத்தனர்.

அண்மையில் காலமான திருக்குடும்ப சபையின் அருட்சகோதரி  ஜேம்ஸ் கூஞ்ஞ அவர்களின் நல்லடக்கத் திருப்பலி இன்று 07.08.2019 புதன்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. இத் திருப்பலியை அருட்சகோதரி அவர்களின் உறவினர்களும், கிராமத்தைச் சேர்ந்தவர்களுமான அருட்பணி ச.ஜெயறாஜன் கூஞ்ஞ, அருட்பணி அ.லக்ஸ்ரன் டீ சில்வா ஆகியோரோடு மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளாரும் இணைந்து ஒப்புக் கொடுத்தனர்.

பெருந்தொகையான மக்களும், அருட்பணியாளர்களும், துறவிகளும் இத் திருப்பலியில் கலந்து செபித்தனர். திருக்குடும்ப அருட்சகோதரிகளின் யாழ்ப்பாணம் மாகாணத் தலைவி அருட்சகோதரி தியோப்பின் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதன் பின் மன்னார் அருட்சகோதரியின் உடல் மன்னார் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு குருக்கள் துறவிகளுக்கான பகுதியிலே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இத் திருப்பலியின் தொடக்கத்தில் திருக்குடும்ப அருட்சகோதரிகளின் சார்பில் முன்னுரை வழங்கிய அருட்சகோதரி செபோ வழங்கிய முன்னுரையின் சில பகுதிகள்

இறை பக்தியும் விசுவாசமும் நிறைந்த லோறனஸ் சவிரி கூஞ்ஞ யக்கோவா குருஸ் என்னும் தம்பதியினருக்கு ஆறாவது மகளாக தலைமன்னார் கிராமத்தில் பிறந்தார். தனது குடும்பத்திலே இவர் இறை பக்தியும் உற்சாகமும், எல்லோருடனும் அன்போடு பழகும் தன்மைகளும் ஒருங்கே அமையப் பெற்றவராகவும், நலலுள்ளம் கொண்டவராகவும், ஏழைகள் மட்டில் இரக்கம் உள்ளவராகவும், மகிழ்ச்சியோடு வாழ்ந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊராகிய தலைமன்னாரிலும், உயர் கல்வியை அனுராதபுரத்திலும் மற்றும் இளவாலையிலும் தொடர்ந்தார்.

இவரின் நெருங்கிய உறவினர்களான அருட்சகோதரிகள் றெஸஜினா கூஞ்ஞ, கேட்றுட் பெர்னாண்டோ, டெனிஸ் கூஞ்ஞ, அஆகியோரின்; வாழ்வால் ஈர்க்கப்பட்டவராக, இறைவனின் செயலைத் தன் வாழ்வில் இனம் கண்டு, தன்னை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் எனும் ஆசையினால் தூண்டப்பட்டவராக, தான் ஒரு திருக்குடும்ப சகோதரியாக வரவேண்டும் என்ன ஆவலினால் 1954ம் ஆண்டு மார்கழி மாதம் 18ம் திகதியன்று பண்டத்தரிப்பு மடத்தில் சேர்ந்துகொண்;டார். “கலப்பையில் கைவைத்த பின் திரும்பிப் பார்க்காதீர்” என்ற் வார்த்தைகளைத் தனதாக்கி 1956ல் தனது முதல் வார்த்தைப்பாட்டைக் கொடுத்துத் தனது வாழ்வை இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்தார். 1962ல் தனது நித்திய அர்ப்ணத்தை முடித்த பின் தனது பணிவாழ்வுப் பயணத்தை இளவாலை, வவுனியா, மன்னார், பருத்தித்துறை, ஊர்காவற்துறை, இறாகலை தாண்டவன்வெளி, யாழ்மாகாண இல்லம், முல்லைத்தீவு, உருத்திரபுரம், வங்காலை, பள்ளிமுனை, புதுக்குடியிருப்பு, ஜெயந்திபுரம், வெள்ளவத்தை, பறப்பாங்கண்டல் போன்ற பணித்தளங்களில் மகிழ்சியுடனும், ஆர்வத்துடனும் தன்னை அர்ப்பணித்து பணிசெய்துள்ளார். ஜெயந்திபுரத்தில் 6 வருடங்கள் குழுத் தலைவியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இறுதி 4 ஆண்டுகள் மன்னாரில் பணிபுரிந்து “நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் இனி எக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே” என்ற இறைவார்த்தைக்கேற்ப தனது வாழ்வை முழுமையாக வாழ்ந்துள்ளார்.

எமது சகோதரி அமைதியான சுபாவமும், இரக்க குணமும் கொண்டவர். இவர் தான் கற்றுக்ககொண்ட மறைக்கல்வி, தையற்கலை, சமையற்கலை பல்வேறுபட்ட கைவேலைகள், முன்பள்ளி சிறார்களை வழிநடத்தல் போன்ற பணிகளை மகிழ்சியுடனும், இறைமகிமைக்காகவும் செய்து கொண்டார். மேலும் பெரியவர் சிறியவர் கற்றோர் கல்லாதோர் பாமரர் பணக்காரர் அனைவருடனும் மகிழ்சியோடு பேசிப்பழகி குடும்ப உறவுகளை கட்டியெழுப்பியுள்ளார். இவரிடம் விளங்கிய விசுவாசம், தாழ்மை, பொறுமை இரக்கம் போன்ற பண்புகள் இவரது துறவு வாழ்வையும், பணிவாழ்வையும் சிறப்பாக மெருகூட்டியது. அருட்சாதனங்கள் பெறுவதற்காக ஆயத்தப்படுத்தும் பணியையும், மக்களை ஆர்வத்தோடு தேடிச்சென்று அவர்களின் குறைநிறைகளை அறிந்து, அவர்களுக்கு செவிமடுத்து அறிவுரை கூறி  விசுவாசப்பயணத்தில் அவர்களது வாழ்வு தொடர அவர்களை முழுமையாக ஆழப்படுத்தினார்.

உடைந்த பிரிந்த குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுடன் உரையாடி ஆலோசனை வழங்கி, மீளவும் உறவோடு கூடிய நல்ல குடும்ப வாழ்வை வாழ வழிப்படுத்தினார். இளையோர் தம் வாழ்வில் தெளிவு பெறவும் வாழ்வின் குறிக்கோளை நோக்கி பயணிக்கவும், நல் வழிகாட்டியாக இருந்துள்ளார். நோயாளர்களை தேடிச்சென்று, அவர்களுக்கு ஆறுதல் கூறி நற்கருணை வழங்கி, அவர்களின் ஆன்மீக தேவைகளை நிறைவு செய்துள்ளார்.

எம் சகோதரிக்கு வாழ்வு எனும் கொடையைக் கொடுத்து, தன் ஆசீர் அருள்வளங்களால் நிரப்பி, காத்து வந்த இறைவனுக்கு நன்றி கூறுவதோடு, எம் திருக்குடும்ப சமையிலே பல்வேறு பணிகளின் மூலம் இறை அன்புக்காக வாழ்ந்து, இறைமகிமையை பரப்பி வாழ்ந்த எம் சகோதரிக்கு நன்றி கூறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *