அருள்வளம் நிறைந்து ஆன்மிக மணங் கமழும் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் இன்று 06.08.2019 செவ்வாய்க் கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின.
அருள்வளம் நிறைந்து ஆன்மிக மணங் கமழும் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் இன்று 06.08.2019 செவ்வாய்க் கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின.
இன்று மாலை 05.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் இறைவேண்டலை முன்னெடுத்த பின்னர் மடுமாதா திருத்தல பரிபாலகர் அருட்பணி ச.ஜொ.பெப்பி சோசை அடிகளார் மடுமாதா திருத்தலக் கொடியினையும், மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் திருத் தந்தையின் கொடியினையும், தமிழ் மறையுரைஞர் அருட்பணி போல் நட்சேத்திரம் அ.ம.தி அடிகளார் மற்றும் சிங்கள மறையுரைஞர் அருட்பணி அசங்க அ.ம.தி அடிகளார் ஆகியோர் இலங்கைத் திருச்சபைக் கொடியினையும் ஏற்றி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதான ஆலயத்தில் இன்றைய மாலை வழிபாடுகள் தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் நடைபெற்றன. இத் திருவிழாவிற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டள்ளன. கணிசமான தொகை மக்கள் இன்றைய வழிபாடுகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.