கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களமும் தேசிய மறைக்கல்வி நிலையமும் இணைந்து கத்தோலிக்க மறைமாவட்டங்களுடாக கத்தோலிக்க மாணவர்களுக்கு நடாத்தும் திருவிவிலிய வினாவிடைப் போட்டிகளின், பங்குமட்டப் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மறைக்கோட்ட மட்டப் போட்டிகள் நேற்று 03.08.2019 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்திலுள்ள வவுனியா, மடு, முருங்கன், மன்னார் ஆகிய மறைக் கோட்டங்களில் நடைபெற்றது. மேற் பிரிவில் 186 மாணவர்களும் கீழ்ப்பரிவில் 180 மாணவர்களும் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.மறைக்கல்வி நிலையமும் இணைந்து கத்தோலிக்க மறைமாவட்டங்களுடாக கத்தோலிக்க மாணவர்களுக்கு நடாத்தும் திருவிவிலிய வினாவிடைப் போட்டிகளின், பங்குமட்டப் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மறைக்கோட்ட மட்டப் போட்டிகள் நேற்று 03.08.2019 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்திலுள்ள வவுனியா, மடு, முருங்கன், மன்னார் ஆகிய மறைக் கோட்டங்களில் நடைபெற்றது. மேற் பிரிவில் 186 மாணவர்களும் கீழ்ப்பரிவில் 180 மாணவர்களும் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.
மன்னார் மறைக்கோட்டத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி கல்லூரி தேசிய பாடசாலையிலும், மடு மறைக்கோட்டத்தில் ஆட்காட்டிவெளி றோ.க.த.க. மகாவித்தியாலயத்திலும், முருங்கள் மறைக்கோட்டத்தில் புனித டொண் பொஸ்கோ தொழில் நுட்பக் கல்லூரியிலும், வவுனியா மறைக்கோட்டத்தில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் கேட்போர் கூடத்திலும் மறைக்கோட்ட முதல்வர்களான அருட்பணி.அ.ஞானப்பிரகாசம், அருட்பணி.ச.சத்தியறாஜ், அருட்பணி.லீ.சுரேந்திரன் றெவல், அருட்பணி.அ.இராஜநாயகம் ஆகியோரின் வழி நடாத்துதலின் கீழ் துறவிகள் , மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு இப் பரீட்சை நடைபெற்றது.