காத்தான்குளம் பங்கில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புனித யோசப்பு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும் 27.07.2019 மாலை நடைபெற்றது. இத் திரு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களை ஆலய நுழைவாயிலில் வைத்து பங்கு மக்கள் வரவேற்றனர். பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயரும் ஏனை விருந்தினர்களும் ஆலய முகமண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
காத்தான்குளம் பங்கில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புனித யோசப்பு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும் 27.07.2019 மாலை நடைபெற்றது. இத் திரு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களை ஆலய நுழைவாயிலில் வைத்து பங்கு மக்கள் வரவேற்றனர். பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயரும் ஏனை விருந்தினர்களும் ஆலய முகமண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
அதன் பின்னர் ஆயர் அவர்கள் கத்தோலிக்க திரு அவையின் திரு வழிபாட்டுத் திரு மரபிற்கொப்ப முறைப்படி ஆலயத்தைத் திறந்த வைத்து, ஆலயத்தின் நுழை வாயிலையும், ஆலயத்தையும், பலிப் பீடத்தையும், நற்கருணைப் பேழையையும் அர்சித்துப் புனிதப்படுத்தினார்.
திருப்பலி வேளையில் இறைவார்த்தைப் பகிர்வின்போது ஆயர் தந்தை அவர்கள், ஆலயங்கள் புனிதமானவை, அவை இறைவனின் இல்லம், அவை அனைவருக்குமான இல்லம் எனவே ஆலயங்கள் அமைக்கப்படுவதன் நோக்கத்தை அனைவரும் உணர்ந்து நாம் அனைவரும் கிறிஸ்துவின் சிடர்கள், ஒரே நம்பிக்கையாளர் குழுமத்தின் இறைமக்கள் சமுதாயம் என்னும் மனப் பக்குவத்தோடு செயற்படவேண்டும் என்னும் ஆன்மிக கருத்தாழமிக்க சிந்தனையைப் பிரசன்னப்படுத்தியதோடு, நாம் நம் சொந்த மொழியில் இறைவனை வழிபட நமக்கு இரண்டாம் வத்திக்கான் ஒரு சிறப்பான உந்து சக்தியைத் தந்திருக்கின்றது. நாம் அனைவரும் இதனை உணர்ந்தவர்களாய் திருப்பலி வேளைகளிலும், ஏனை வழிபாட்டுக் கொண்டாட்ட நேரங்களிலும் மௌனிகளாக இருக்காமல் அல்லது செபங்களுக்கு பதில் மொழி கூறுவது பாடகர் குழாமின் பணி என்று நனைத்து ஒதுங்கியிருக்காது வாய் திறந்து செபங்களுக்குப் பதில் மொழி கூறவேண்டும் என்ற வழிகாட்டல் சிந்தனையும் அழுத்திக் கூறினார்.
இப் பங்கின் முதல் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்ட அருட்பணி.செ.வசந்தக்குமார் அடிகளாரின் பணிக்காலத்தில் ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் காலத்தில் அனுமதியோடு அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தற்போதைய பங்குத் தந்தை அருட்பணி.யே.அமல்றாஜ் குரூஸ் அவர்களல் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. இப்பணிக்காக ஆலய அருட்பணிப் பேரவையும், ஆலய மக்களும் தங்களது முழுமையான பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் வழங்கி மிகுந்த அர்பணத்தோடு செயற்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புனித யோசப்பு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழாவும், ஆலயத் திறப்பு விழாவும் சிறப்பாக அமைய பங்கத் தந்தையோடு இணைந்து துறவிகளும், ஆலயத்தின் அருட்பணிப்பேரவையும், பல்வேறு பணிக்குழுக்களும், ஆலய மக்களும் இணைந்து பணியாற்றினர். இத் திருநிகழ்வில் பல அருட்பணியாளாஇகளும், துறவிகளும், இறை மக்களும் கலந்து சிறப்பித்தனர்.


























































































































































































