வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழாவின் ஆயத்த நாட்களின் இறுதி நாளான இன்று (25.07.2019) வியாழக்கிழமை, வங்கலைப் பங்குமக்கள் சிறப்பு மாலைப் புகழ் ஆராதனையை தங்கள் பங்கின் தொன்மையான திருவழிபாட்டு மரபினைப் பின்பற்றி நடாத்தினர். மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளாரின் தலைமையில் சிறப்பு மாலைப் புகழ் வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்த வருகைதந்தந்திருந்த வின்சென்சியன் அருட்பணியாளர் சபையின் அருட்பணியாளர் வர்கிஸ் அவர்கள் இன்றைய நற்கருணை வழிபாட்டை நடாத்தி மறையுரையுரையையும் வழங்கினார்.

இறுதியில் நற்கருணைப் பவனி இடம் பெற்றது. தங்களின் நெய்தல் நிலப் பிற்புலத்திலே அழகிய தேரினை வடிவமைத்து நற்கருணை நாதரைப் பவனியாக எடுத்து வந்தனர். பல அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும் இறைமக்களும் இவ் வழிபாட்டில் கலந்து செபித்தனர். பங்குத் தந்தை அருட்பணி.ச.மாக்கஸ் அடிகளார் பங்கு மக்களோடு இணைந்து அனைத்தையும் மிகவும் ஆன்மிக வளத்தோடு ஆயத்தப்படுத்தி நெறிப்படுத்தியிருந்தார். நாளை காலை ( 26.07.2019) 06.15 மணிக்கு மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில் திருவிழாக் கூட்டுத் திருப்பலி நடைபெறும்.