பெரிய குஞ்சுக்குளம் புனித அங்காமத்து மாதா ஆலயப் பங்கிற்கான புனித பங்குப் பணிமனையும், அருட்பணியாளர்களுக்கான வதிவிடமும் நேற்று (17.07.2019) புதன்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

பங்குமக்களும்,பங்குத் தந்தை அருட்பணி றொணிஸ் வாஸ் அடிகளாரும், பங்கில் பணியாற்றும் அருட்சகோதரிகளும் ஆயர் அவர்களையும், அழைக்கப்பட்ட ஏனைய பிரமுகர்களையும் தமிழ்ப் பண்பாட்டு முறைப்படி வரவேற்றனர். அதன் பின்னர் பங்குப் பணிமனையும், அருட்பணியாளர்களுக்கான வதிவிடமும் ஆயரினால் திருச்சபையின் திருவழிபாட்டு முறையின்படி ஆசிர்வதித்துத் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மடுப்பதிப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை, முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி.லீ.சுரேந்திரன் றெவல்,நானாட்டான் பிரதேச சபைத் தவிசாளர் திரு.பரஞ்சோதி மற்றும் பல அருட்பணியாளர்களும், தறவிகளும், பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.