மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் ஆன்மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுமாதா ஆடித் திருவிழா 02.07.2019 செவ்வாய்க்கிழமை நலம் செறிந்த ஆன்மிகச் செழுமையோடு கொண்டாடப்பட்டது.மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் ஆன்மிக வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுமாதா ஆடித் திருவிழா 02.07.2019 செவ்வாய்க்கிழமை நலம் செறிந்த ஆன்மிகச் செழுமையோடு கொண்டாடப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் நடைபெற்ற திருவிழாத் திருப்பலிக்கு கொழும்பு அதி உயர் மறைமாவட்டடத்தின் துணை ஆயர் பேரருட்கலாநிதி அன்ரனி ஜெயக்கொடி ஆண்டகை அவர்கள் வருகை தந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். இத் கூட்டுத் திருப்பலியில் பெருந் தொகையான அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலி ஒப்புக் கொடுத்தனர். திருவிழாத் திருப்பலியில் பல துறவிகள், அரச உயர் நிலைப் பணியாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் நிலைப் பணியாளர்கள் மற்றும் பெருந்தொகையான பக்கதர்கள் கலந்து கொண்டனர்.