மன்னார் மறைமாவட்டத்தின் சில பங்குகளிலிருந்து குறிப்பிட்ட சில புதிய பெண் மறையாசிரியர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு இவர்களுக்கான மூன்றுமாத வதிவிடப்பயிற்சி மன்னார் மறைமாவட்ட கல்வி, மறைக்கல்வி, விவிலிய அருட்பணி களுக்கான மையமான புனித வளன் அருட்பணி மையத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

கடந்த 16.06.2019 இப்பணி மையத்திற்கு வந்து முன்னோடிப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட இவர்களுக்கான முழுமையான பயிற்சியினை 18.06.2019 மாலை இப்பணி மையத்தில் திருப்பலியை நிறைவேற்றியபின் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். இந் நிகழ்வில் பல மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் கலந்து புதிய மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களாக பயிற்சி பெற வந்திருப்;போரை உற்சாகப்படுத்தினர்.