மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்களின் பங்கு இணைப்பாளர்களுக்கான மாதாந்த ஒன்று கூடல் 15.06.2019 சனிக்கிழமை பம்பைமடு இறை இரக்க ஆண்டவர் திருத்தலத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக்கல்விப் பணியாளர்களின் பங்கு இணைப்பாளர்களுக்கான மாதாந்த ஒன்று கூடல் 15.06.2019 சனிக்கிழமை பம்பைமடு இறை இரக்க ஆண்டவர் திருத்தலத்தில் நடைபெற்றது.
அன்றைய நாளின் வளப்படுத்ததல் உரையை இத் திருத்தலத்தின் இயக்குனரும், பம்பைமடுப் பங்குத் தந்தையும், வவுனியா மறைக்கோட்ட மறைக்கல்விப் பணிகளுக்கான இணைப்பாளருமான அருட்பணி.பி.சே.றெஜினோல்ட் அடிகளார் வழங்கினார். மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்களுக்கான திருப்பலியை வவுனியா மறைக்கோட்ட முதல்வரும், வேப்பங்குளம் பங்குத் தந்தையுமான அருட்பணி.இராஜநாயகம் அடிகளார் ஒப்புக் கொடுத்தார்.
இறுதியாக மறைவாழ்வுக் கல்விப் பணியாளர்கள் பம்பைமடுவில் அமைந்துள்ள அன்னை தெரேசா முதியோர், வறியோர் அன்புப் பணி இல்லம், மற்றும் கிளறிசியன் அருட்பணியாளர்களும், திருக்குடும்ப அருட்சகோதரிகளும் இணந்து நடாத்தும் வரோட் புனர்வாழ்வு மையத்தில் இருப்போரையும் சந்தித்து அனுபவங்களைப் பெற்றுக் கொண்டனர்.