ஆனி மாதம் 13ம் திகதி புனித அந்தோனியாரின் திருவிழா உலகெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் வவுனியா இறம்பைக்குளம், புனித அந்தோனியார் ஆலயப் பங்கு மக்கள் தங்கள் பாதுகாவலராம் புனித அந்தோனியாரின் திருவிழாவை ஆன்மிக செழுமையோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

பங்குத் தந்தை அருட்பணி.ம.ஜெயபாலன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கண்டி அம்பிட்டிய தேசிய குருமட மெய்யில் துறை இயக்குனர் அருட்பணி.பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் திருவிழாத் திருப்பலியை தலைமையேற்று ஒப்புக் கொடுத்தார்.
இவ்விழாவில் பல அருட்பணியாளர்களும், துறவிகளும், பெருந்தொகையான இறைமக்களும் கலந்து இறையருள் பெற்றனர். திருவிழாத் திருப்பலி முடிவில் புனித அந்தோனியாரின் திருவுருவப் பவனியும், ஆசீரும் இடம்பெற்றது.