மாதோட்டம் என்றும், வணிகத்தின் வாய்க்கால் என்றும் கிறிஸ்தவ விசுவாசத்தின் விளை நிலம் என்றும், மறைசாட்சிகளின் மண் என்றும் பலராலும் போற்றப்படும் மன்னார் மாவட்டத்திலே 150 ஆண்டுகளாக அருள்மணம், ஆன்மிக மணம், அறிவுமணம் வீசுகின்ற தனித்துவமான முழுமுனித வளர்ச்சிக்கான ஆறிவூட்டல் களஞ்சியமாகத் திகழும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசியப் பாடசாலை தனது 149வது அகவையில் தடம் பதித்து 150வது ஆண்டை எட்டவிருக்கும் இந்நிலையில் ( 1870 – 2020)
மாதோட்டம் என்றும், வணிகத்தின் வாய்க்கால் என்றும் கிறிஸ்தவ விசுவாசத்தின் விளை நிலம் என்றும், மறைசாட்சிகளின் மண் என்றும் பலராலும் போற்றப்படும் மன்னார் மாவட்டத்திலே 150 ஆண்டுகளாக அருள்மணம், ஆன்மிக மணம், அறிவுமணம் வீசுகின்ற தனித்துவமான முழுமுனித வளர்ச்சிக்கான ஆறிவூட்டல் களஞ்சியமாகத் திகழும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசியப் பாடசாலை தனது 149வது அகவையில் தடம் பதித்து 150வது ஆண்டை எட்டவிருக்கும் இந்நிலையில் ( 1870 – 2020) 150வது யூபிலி ஆண்டுக்கான கால்கோள் விழா கடந்த திங்கட்கிழமை 10.06.2019 காலை 08.00 மணிக்கு கல்லூரியின் முதல்வர் அருட்சகோ. றெஜினோல்ட் அவர்களின் தலைமையில்,மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையிலான மகிழ்வு கூட்டுத் திருப்பலியோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
150வது ஆண்டு யூபிலி தொடக்க விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. திங்கட்கிழமை 10.06.2019 காலை 08.00 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடந்து ஏனைய நிகழ்வுகளும் இடம் பெற்றன. இத் திருப்பலியின்போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை அடிகளார், ஆன்மிக செழுமையோடு வளர்ந்து வரும் இப்பாடசாலையின் வரலாற்றையும், நோக்கங்களையும் சாதனையையும் விரிவாக எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் இக் கல்லூரியைக் கடந்த காலத்தில் வளர்த்தெடுத்த துறவற சபைகளின் முதல்வர்களான அமல மரித் தியாகிகளின் யாழ் மாகாண முதல்வர் அருட்பணி.எட்வின் வசந்தறாஜா அடிகளாரும்;, முன்னர் தூய வளனார் துறவற சபையாக இயங்கி, தற்போது அன்பின் அருட்பணிச் சகோதரர்கள் என அழைக்கப்படும் துறவற சபையின் இலங்கைக்கான முதல்வர் அருட்சகோ.கிறிஸ்துராஜன் அவர்களும், நீண்டகாலமாக இக் கல்லூரியை வழிநடாத்தி வரும் புனித டி லா சால் துறவற சபையின் இலங்கைக்கான முதல்வர் அருட்சகோ.கிறிஸ்ரி குரூஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.
மகிழ்வுத் திருப்பலியில் ஆயரோடு இணைதிருப்பலி நிறைவேற்றுனர்களாக அமல மரித் தியாகிகளின் யாழ் மாகாண முதல்வர் அருட்பணி.எட்வின் வசந்தறாஜா அடிகளாரும், இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பாக அருட்பணி.தி.நவரேட்ணம் அடிகளாரும், மன்னார் பேராலயப் பங்கத் தந்தை அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளாரும், மன்னார் மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவற சபைகளின் ஒன்றியத் தலைவர் அருட்பணி.அல்பன் இராஜசிங்கம் அடிகளாரும் கலந்து கொண்டனர் அத்தோடு இக் கல்லூரியின் கல்வி பயின்று அருட்பணியாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல அருட்பணியாளர்களும் இத் திருப்பலில் இணைந்து கொண்டனர். பெருந்தொகையான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், அரச கல்விசார், பெது நிர்வாகம் சார், மற்றும், அரசியர்சார் உயர் நிலைப் பணியார்களும், பாதுகாப்புத் துறை தலைவர்களும்,பழைய மாணவர்களும், நலன் விரும்பிகளும், அருட்பணியாளர்கள், துறவிகள் எனப் பெருந்தொகையானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.