கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்களுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தின் மறையாசிரியர்களுக்கும் மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளர் கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்களுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தின் மறையாசிரியர்களுக்கும் மன்னார் மறைமாவட்ட மறைவாழ்வுக் கல்விப் பணியாளர் பிரதிநிதிகளுக்குமான நட்பு அடிப்படையிலான சந்திப்பொன்று நேற்று 08.06.2019 சனிக்கிழமை காலை மடுத்திருப்பதியில் நடைபெற்றது.
குண்டு வெடிப்பில் பாதிப்படைந்தவர்களுக்கான மீளக் கட்டியெழுப்புதல் நிகழ்ச்சித் திட்டத்தின் அருட்பணியாளர் பிரசாத் அவர்களின் தலைமையில் அருட்பணியாளர்கள், துறவிகள் அடங்கிய குழுவொன்று அவர்களை மடுத் திருப்பதிக்கு அழைத்து வந்திருந்தது.