அளவக்கை தூய கார்மேல் அன்னை ஆலயப் பங்கின் துணை ஆலயமாக உள்ள மாவிலங்கேணி புனித மரியன்னை ஆலயத்தில்; கட்டி முடிக்கப்பட்ட புதிய ஆலயத் திறப்புவிழா 20.05.2019 திங்கட்கிழமை மாலை 04.30 மணிக்கு நடைபெற்றது.அளவக்கை தூய கார்மேல் அன்னை ஆலயப் பங்கின் துணை ஆலயமாக உள்ள மாவிலங்கேணி புனித மரியன்னை ஆலயத்தில்; கட்டி முடிக்கப்பட்ட புதிய ஆலயத் திறப்புவிழா 20.05.2019 திங்கட்கிழமை மாலை 04.30 மணிக்கு நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்முhனுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் புதிய ஆலயத்தை கத்தோலிக்க திருச் சபையின் திருவழிபாட்டு திரு மரபின்படி ஆசீர்வதித்து, திறந்து, அர்ச்சித்தார். பங்குத் தந்தை அருட்பணி.நியூட்டன் அடிகளார் ஆலயமக்களோடு இணைந்து அனைத்து நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தி செயற்படுத்தினார்.