உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக

இலங்கை வரலாற்றின் வார்த்தைகளால் வர்ணிக்கப்படமுடியாத பெரும் துன்பம் நிறைந்து, மனி நேயத்திற்கும், சமய நம்பிக்கைக்கும் எதிராக நடாத்தப்பட்ட கொடுரமான வெடிகுண்டுத் தாக்குதல் பல அப்பாவிகளின் உயிர்களை வாரிச் சென்றுவிட்டது.

இலங்கை வரலாற்றின் வார்த்தைகளால் வர்ணிக்கப்படமுடியாத பெரும் துன்பம் நிறைந்து, மனி நேயத்திற்கும், சமய நம்பிக்கைக்கும் எதிராக நடாத்தப்பட்ட கொடுரமான வெடிகுண்டுத் தாக்குதல் பல அப்பாவிகளின் உயிர்களை வாரிச் சென்றுவிட்டது.உலகின் மீட்டபராம் இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா திருவழிபாட்டில் கலந்து கொண்ட இறைமக்கள் மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இன்று பலருடைய இதயத்திலே ஆறாத துன்பக் காயமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது:

இந்த நிலையிலே இந்தக் கொடுமையினால் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், காயப்பட்டவர்கள் விரைவில் நலம் பெறவும், பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்காகவும் இறையருள் வேண்டி நேற்று ( 24.04.2019) புதன் கிழமை காலை 09.30 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமமாவட்டத்தில் பணியாற்றும் அருட்பணியாளர்களும், துறவிகளும் பெருந்தொகையாக இத் திருப்பலியில் பங்கேற்று இச் சிறப்புக் கருத்திற்காகச் செபித்தனர்.சமகால நிலைமையைக் கருத்திற்கொண்டு பொது இறைமக்களை இத் திருப்பலியில் கலந்து கொள்ள அழைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *