நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூர்ந்து வழிபடும் தூய வெள்ளிக்கிழமை திருவழிபாடுகள் நேற்று ( 19.04.2019) மாலை தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ப.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூர்ந்து வழிபடும் தூய வெள்ளிக்கிழமை திருவழிபாடுகள் நேற்று ( 19.04.2019) மாலை தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ப.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முக்கிய திருவழிபாடுகள் முடிந்தபின் வழமையாக இடம்பெறும் அடையாளமுறையிலான இயேசுவின் இறப்பு காட்சி நிகழ்வுகள், ஆசந்தி போன்ற திருநிகழ்வுகள் நேற்றை தினம் பெய்த பெரும் மழை காரணமாகவும், பெருந்தொகையாக வந்திருந்த இறை மக்கள் பங்கேற்கக் கூடிய சூழமைவு இல்லாததாலும் இடம் பெறவில்லை.