திருவருட் சாதனங்களின் அர்ச்சிப்புக்குப் பயன்படும் திரு எண்ணெய்கள் புனிதப்படுத்தி அர்ச்சிக்கும் திருப்பலி நேற்று மாலை ( 15.04.2019) மாலை 05.00 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில் நடைபெற்றது.திருவருட்சாதனங்களின் அர்ச்சிப்புக்குப் பயன்படும் திரு எண்ணெய்கள் புனிதப்படுத்தி அர்ச்சிக்கும் திருப்பலி நேற்று மாலை ( 15.04.2019) மாலை 05.00 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில் நடைபெற்றது.
இத்திருவழிபாட்டில் புகுமுக அருட்சாதன எண்ணெய், நோயில்பூசுதல் எண்ணெய், கிறிஸ்மா எண்ணெய் என்பன ஆயரால் அர்ச்சித்துப் புனிதப்படுத்தப்பட்டன. அருட்பணியாளர்கள், துறவியர், இறைமக்கள் எனப் பலர் இத் திருப்பலியில் கலந்து செபித்தனர்.