கல்வாரித் திருத்தலத்தை நோக்கிய திருப்பயணம்

மன்னார் மறைமாவட்டத்தில் வருடந்தோறும் தவக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வவுனியா கோமரசன்குளம் கல்வாரித் திருத்தலத்தை நோக்கிய திருப்பயணம் இவ்வாண்டும் ஆன்மிக செழுமையோடு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இவ்வாண்டு பங்குனி மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் இத் திருப்பயணம் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்டத்தில் வருடந்தோறும் தவக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வவுனியா கோமரசன்குளம் கல்வாரித் திருத்தலத்தை நோக்கிய திருப்பயணம் இவ்வாண்டும் ஆன்மிக செழுமையோடு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இவ்வாண்டு பங்குனி மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் இத் திருப்பயணம் நடைபெற்றது.

பங்குனி மாதம் 27ந் திகதி அதிகாலை 04.00 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு தவக்கலத் திருப் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் நாள் மன்னார் மதவாச்சி பிரதான வீதிவழியாகத் திருப் பயணிகள் பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தைச் சென்றடைந்து அன்றைய இரவுப் பொழுதை தூய அந்தோனியார் ஆலயத்தில் கழித்தனர்.

மறுநாள் 28ந் திகதி காலை 05.00 மணிக்கு இடம்பெற்ற வழிபாட்டினைத் தொடர்ந்து பெரியகட்டிலிருந்து, பெரியகட்டு கன்னாட்டி வீதி வழியாக மன்னார் வவனியா பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து வவுனியாவை நோக்கி தங்களது இரண்டாம் நாள் திருப்பயணத்தைத் தொடர்ந்தனர்.

இரண்டாம் நாள் மாலையில் வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்து அன்றைய இரவுப் பொழுதை அங்கே கழித்தனர். மீண்டும் 29ம் திகதி காலை வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டினைத் தொடந்து கல்வாரித் திருத்தலம் நோக்கி திருப்பயணிகள் தங்கள் திருப்பயணத்தை ஆரம்பித்தனர்.

29ம் திகதி காலை கோமரசன்குளம் கல்வாரித் திருத்தலத்தை வந்தடைந்தனர். அதன்பின் திருச்சிலுவைப்பாதையும் அதனைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே தலைமையில் திருப்பலியும் இடம் பெற்றது. பெருந்தொகையான இறைமக்கள் இத்திருப்பயணத்தில் பங்குகொண்டனர். மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலிருந்தும், யாழ் மறைமாவட்டத்தின் சில பகுதிகளிலிருந்தும் திருப்பயணிகள் இந்தத் திருப்பயணத்தில் பங்கேற்றனர்.

திருப்பயணிகள் பணித்த வழிகளிலெல்லாம் பல பங்குகளும், அரச பணி மையங்களும், தனியார் நிறுவனங்களும், பாடசாலைகளும் உணவும், நீராகாரங்களும் வழங்கி திருப் பயணிகளுக்கு உதவியளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *