அன்பின் காவியம் திருப்பாடுகளின் காட்சி

தவக்காலத்தை முன்னிட்டு இயேசுவின் வாழ்வு, பணி, பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில் மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருவி பிரமாண்டமான முறையிலே அன்பின் காவியம் என்னும் மகுடத்தோடு திருப்பாடுகளின் காட்சியினை 07-08.04.2019 ஆகிய இரு தினங்களிலும் சமூகத் தொடர்பு அருட்பணி மைய மைதானத்திலே காட்சிப்படுத்தப்படுத்தியது.

மன்னார் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் இவ் ஆற்றுகையில்; பங்கேற்று மெருகூட்டினர். கலையருவி இயக்குனர் அருட்பணி அ.லக்ஸ்ரன் டீ சில்வா அனைத்தையும் நெறிப்படுத்தினார்.

இந் நிகழ்வுக்கு மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகள், மன்னார் நகர சபை முதல்வர் உயர்திரு.ஜெறாட், மன்னார் மாவட்ட செயலர் உயர்திரு.மோகன்றாஸ், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு. பிறட்லி மற்றும் அருட்பணியாளர்கள், துறவிகள் என பலதரப்பினரும், பெருந்தொகையான பொதுமக்களும் வருகை தந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *