மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் துணை ஆலயமும், மன்னார் மாவட்டத்தின் நீண்டகால விசுவாசப் பாரம்பரியத்தைக் கொண்டதுமான மன்னார் தூய மரியன்னை ஆலய விழா ( காணிக்கை மாதா) ஒன்பது நாட்கள் ஆயத்த வழிபாட்டோடு இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.

மன்னார் மறைமாவட்டத்தில் தெய்வீகத் தியான இல்லத்தை ( டிவைன் தியான இல்லம்) அமைத்துப் பணியாற்றிவரும் வின்சென்சியன் துறவற சபையின் கேரள மாகாணத்தைச் சோந்த அருட்பணியாளர்களான அருட்பணி றபாயேல் மற்றும் அருட்பணி சாயு ஆகியோர் இந் நாட்களில் இறைவார்த்தையை விளக்கியுரைத்து வழிபாடுகளை நடாத்தினர். 31.01.209 வியாழக்கிழமை அருட்பணி போல் றொபின்சன் அடிகளார் தியானத்தை நெறிப்படுத்தினார்.
இன்றை திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார் நிறைவேற்றினார். கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட இத் திருப்பலியில் பல அருட்பணியாளர்களும் இணைந்துகொண்டனர். காலையில் ஆலயத்தின் பிரதான நுழை வாயிலில் ஆரம்ப வழிபாடுகள் இடம் பெற்ற தோடு மெழுகுதிரிகளும் ஆசீர்வதிக்கப்பட்டு பவனியாக ஆலயத்தின் போட்டிக்கோ என அழைக்கப்படும் ஆலயத்தின் முகமண்டபத்திற்குச் சென்று அங்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
துறவிகள், இறைமக்கள், அரச அரச சார்புற்ற பணிநிலை பணியாளர்கள் பலர் இத் திருநிகழ்வில் கலந்து செபித்தனர். இன்று மாலை மன்னார் நகர வீதி வழியாக அன்iனியனஇ திருவுருவப் பவனி இடம் பெறும்.