திருச்சபையின் திருவழிபாட்டு ஒழுங்கின்படி வருடந்தோறும் தை மாதம் 20ம் திகதி உலகமெங்கும் தூய செபஸ்தியாரின் விழா கொண்டாடப்படுகின்றது. மன்னார் மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இருக்கும் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயல மக்களும் தமது பாதுகாவலராம் தூய செபஸ்தியாரின் திருவிழாவை நேற்று 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.

ஒன்பது நாட்கள் ஆன்மிக ஆயத்த வழிபாட்டோடு 19ம் திகதி மாலைப்புகழ் வழிபாடும் இடம்பெற்றது. தவிர்க்கமுடியாத காரணத்தினால் மன்னார் ஆயர் அவர்கள் இத்திருவிழாத் திருப்பலியில் பங்கேற்ற முடியாததால் இந்தியா தமிழ்நாடு மதுரை மாநில அமல அன்னை கப்புச்சியன் துறவற சபையின் முதல்வர் அருட்பணி சத்தியன் இன்னாசி அவர்கள் இத் திரு விழாத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். பல அருட்பணியாளர்களும், துறவிகளும், அரச, அரச சார்பற்ற முதன்மைப் பணியாளர்களும், இறை மக்களும் இத் திருவிழாத் திருப்பலியில் கலந்து செபித்தனர்.